(Reading time: 3 - 6 minutes)

Chillzee வீட்டு பராமரிப்புக் குறிப்புகள் - 06 - கிரெடிட் கார்ட் டிப்ஸ்

credit card

மெல்ல மெல்ல கிரெடிட் கார்ட் என்பதும் நம் வாழ்வில் ஒரு அங்கமாகி வருகிறது.

 

புதிதாக வரும் பல விஷயங்களை போலவே இதிலும் நல்லதும் இருக்கிறது, கெட்டதும் இருக்கிறது.

 

உங்களுக்கு உதவும் சில கிரெடிட் கார்ட் தொடர்பான டிப்ஸ் இதோ:

 

1. விசாரியுங்கள்:

கிரெடிட் கார்ட் வாங்குவது என்று முடிவு செய்த உடன், ஏதோ ஒரு வங்கியை தேர்வு செய்யாமல், கிரெடிட் கார்ட் பயன்படுத்தும் உங்கள் நண்பர்கள், உறவினர்களிடம் கேட்டுப் பாருங்கள்.

அவர்களின் அனுபவம் உங்களுக்கு சரியான வங்கியை தேர்வு செய்ய உதவும்.

 

2. பணம் செலுத்த தரும் காலம்

கிரெடிட் கார்ட் பயன்படுத்தி செய்யும் செலவை குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டினால் மட்டுமே கூடுதல் கட்டணம் கிடையாது.

எனவே நீங்கள் தேர்வு செய்யும் கார்டின் பணம் செலுத்த தரப்படும் காலம் எவ்வளவு என்றுக் கேட்டு தெரிந்துக் கொள்ளுங்கள்.

இந்த அவகாசம் கொஞ்சம் நீளமாக இருந்தால் வசதியாக இருக்கும் என்பதை மனதில் வையுங்கள்.

 

3. கிரெடிட் கார்ட் பணம்

கிரெடிட் கார்ட் பயன்படுத்தி பணம் எடுக்க முடியும் என்றாலும், ரொம்ப பெரிய எமர்ஜென்சி என்றால் மட்டுமே அப்படி பணம் எடுங்கள்.

இல்லை என்றால் வேறு வழிமுறைகளில் பணம் ஏற்பாடு செய்ய முயலுங்கள்.

 

4. பொருட்கள்

உங்கள் கிரெடிட் கார்ட் பயன்படுத்தி என்னென்ன பொருட்கள் வாங்கினீர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். 

இயன்ற அளவில் கிரெடிட் கார்ட் பயன்படுத்தும் போது தரும் ரசீதையும் பத்திரப் படுத்தி வையுங்கள்.

இது உங்களின் பில்லை சரி பார்க்க உதவும்.

 

5. பணத்தை சரியான நேரத்தில் கட்டுங்கள்

இன்னும் நாட்கள் இருக்கிறது இருக்கிறது என்று தள்ளி போடாமல் கடைசி நாளுக்கு முன்பாகவே பணத்தை கட்டி பழகுங்கள்.

 

6. ஒன்று மட்டும் போதும்!

ஒரே ஒரு கிரெடிட் கார்ட் பயன்படுத்தி பழகுங்கள்.

ஒன்றுக்கும் மேற்பட்ட கிரெடிட் கார்டுகள் இருந்தால், ஷாப்பிங் செல்லும் நேரத்தில் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு செல்லாமல் ஒன்றை மட்டும் எடுத்து செல்லுங்கள்.

 

7. சர்வீஸ் டேக்ஸ்

கிரெடிட் கார்ட் பயன்படுத்தும் முன், அதற்கு தனியாக வரி இருக்கிறதா என்று கேட்டு தெரிந்துக் கொள்ளுங்கள்.

அப்படி இருந்தால், கைவசம் இருக்கும் பணத்தை பயன்படுத்துங்கள். அது தான் புத்திசாலித்தனம்!

 

8. பாதுகாப்பாக வைத்திருங்கள்

உங்கள் கிரெடிட் கார்ட் உங்களுக்கு மட்டுமே! அதை நண்பர்களுடன் பகிர்ந்துக் கொள்வது, அதில் இருக்கும் நம்பர்களை அவர்களுடம் பகிர்வது போன்றவை உங்களுக்கே எதிராக வந்து முடியலாம். எனவே கவனம் தேவை!

அதே போல உங்கள் கார்டிங் ஏடிஎம் பாஸ்வேர்டையும் பத்திரமாக வையுங்கள்.

 

9. தேவை இல்லாத ஆஃபர்களை ஏற்றுக் கொள்ளாதீர்கள்

பல முறை நீங்கள் உங்கள் பில்லை கட்டும் முன், ' இந்த முழு தொகையை நீங்கள் கட்ட வேண்டாம். xyz கட்டினால் போதும்' என்பது போன்ற கலர் கலரான ஆஃபர்கள் உங்களுக்கு தரப் படலாம்.

அதை எல்லாம் ஏற்று கொண்டு ஏமாறாதீர்கள்.

முழு தொகையை கட்டாவிட்டால் பாக்கி இருக்கும் தொகைக்கு நீங்கள் அதிகமான வட்டி கட்ட வேண்டி இருக்கும்.

 

 

 {kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.