(Reading time: 4 - 8 minutes)

எனக்கு பிடித்தவை - 14 - கனவுகள் மட்டும் எனதே எனது

kanavugal mattum enathe enathu

ஒவ்வொருவரின் ரசனை ஒவ்வொரு விதம்... ஒரு கதையை படிக்கும் போது ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதமான எண்ணங்கள் தோன்றும்... இவை எல்லாம் ஒரே போல இருப்பது இல்லை... இந்த தொடரில் நான் சொல்ல போவது எல்லாம் என்னுடைய ரசனைகள், என்னுடைய எண்ணங்கள்... உங்களின் கருத்துக்கள் இதில் இருந்து மாறுபட்டு இருக்கலாம்... அதையும் தெரிந்துக் கொள்ள விழைகிறேன்... உங்களுடைய கருத்துக்களை தயங்காமல் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

ந்த முறை நான் பகிர்ந்துக்கொள்ள போகும் கதை, பிந்து வினோத் எழுதிய 'கனவுகள் மட்டும் எனதே எனது' எனும் கதை.

நம் chillzeeயில் தொடராக வந்து நாவலாக வெளியாகி இருக்கும் பல கதைகளில் இதுவும் ஒன்று.

சில மாற்றங்களுடன் புத்தக வடிவில் இருக்கும் கதையை படிக்கும் வாய்ப்பு சமீபத்தில் கிடைத்தது.

கதை:

ன்பான அம்மா, பாசமான தங்கை, தம்பி என சென்னையை சேர்ந்த நடுத்தர குடும்பத்தை சார்ந்தவள் கதாநாயகி நந்தினி.

புரிந்தும் புரியாமல் இருக்கும் வயதில் பெற்றவர்களை ஒரு விபத்தில் இழந்து, தனக்கு பிடித்த விதத்தில் அமெரிக்க வாழ்க்கையை வாழ்பவன் கதாநாயகன் சதீஷ்.

ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இரு வேறு துருவங்களான நந்தினியும், சதீஷும் just for benefit திருமணம் செய்துக் கொள்ள நேர்கிறது.

திருமணத்திற்கு பின் நந்தினி, சதீஷ் இருவரின் மனமும் இயல்பாக மற்றவரின் பக்கம் சாய்கிறது.

நந்தினி அதை தன் செயல்களில் வெளிபடுத்த, அதை புரிந்தாலும் ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிக்கிறான் சதீஷ்.

திருமணம் எனும் வட்டத்துக்குள் சிக்கிக் கொள்ள விரும்பாமல் இருக்கும் அவனுக்கு, நந்தினி பக்கமாக சாயும் தன் மன நிலையே குழப்பத்தை கொடுக்கிறது.

அதை காட்டிக் கொள்ளாமல் இருக்க தன் செய்கைகளால் நந்தினியை வருத்தப்படுத்தவும் செய்கிறான்.

இப்படியே நாட்கள் செல்ல, ஒரு நிலையில், நந்தினியிடம் சட்ட படி பிரிந்து விடலாம் என்று சொல்கிறான்.

மனதில் காயம் ஏற்பட்டாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் கணவனிடம் இருந்து பிரிந்து செல்கிறாள் நந்தினி.

மனைவி பிரிந்து சென்ற பின் அவளின் பிரிவு மனதை சுட, நந்தினியை தேடுகிறான் சதீஷ். அதிர்ஷ்டவசமாக அவளை சந்திக்கவும் செய்கிறான்.

ஆனால் அவனின் செயல்களால் மனம் நொந்து போயிருக்கும் நந்தினி அவனை விட்டு விலகி இருக்கவே விரும்புகிறாள்.

அதை ஏற்றுக் கொள்ளாமல் அவளின் மனதை மாற்ற முயல்கிறான் சதீஷ். அந்த முயற்சி சென்னைக்கு பயணமாகி நந்தினியின் அம்மாவை ஐஸ் வைக்கும் அளவிற்கும் செல்கிறது.

சதீஷின் செயல்கள் நந்தினியின் மனதை மாற்றியதா, பிரிந்தவர்கள் இணைந்தார்களா என்பது மீதி கதை!


தை முழுக்க கதாநாயகன் சதீஷ் (எனும்) எஸ்.கே (எனும்) மிஸ்டர் எஸ்ஸின் அடவென்ச்சர்கள் தான் :-)

பார்க்கும் பெண்கள் அனைவரிடமும் கடலை போட்டு கடுப்பேற்றும் கதாநாயகனாக அறிமுகமாகி மெல்ல தன் வசீகரத்தால் கதாநாயகியையும், படிக்கும் நம் மனதையும் கவர்கிறார்.

தானே கையெழுத்து போட்டு மனைவி தொடராமல் விட்ட படிப்பை தொடர் உதவி செய்வது

 

வருடங்கள் சென்ற பின்னும் மனைவியிடம் காதலில் உருகுவது

 

"... இந்தக் கல்யாணத்தால நந்தினியை உங்க கிட்ட இருந்து நான் பிரிக்கலை. பட் உங்களுக்கு ஒரு எக்ஸ்ட்ரா மகன் கிடைச்சிருக்கேன். இனிமேல் எல்லோர் கிட்டேயும் உங்களுக்கு நாலு பசங்கன்னு சொல்லுங்க... "

என தன் பல பரிமாணங்களில் ஜொலிக்கிறார்.

 

சுயமரியாதை, சதீஷ் மீது பயங்கரமான கோபம், அதையும் தாண்டிய காதல் என நல்ல ஒரு கதாநாயகி நந்தினி.

 

துணை கதாபாத்திரங்களாக வரும் அனாமிகா, ஷ்யாம், சாந்தி, சக்திவேல், வள்ளி, குமரன், சரஸ்வதி, சுனந்தினி, நந்து, விஜயா, பில், ஸ்வேதா ஆகியோரும் மனதில் பதிகிறார்கள்.

குறிப்பாக

“பொய்யில ஆரம்பிக்குற ஒரு விஷயம் நல்ல படியா நடந்ததா சரித்திரம் இருக்கா? அவங்க பொய் சொன்னது யார் கிட்ட சாந்தியோட அம்மா கிட்ட! அவங்களை நான் லைஃப் லாங் பார்க்க வேண்டி இருக்குமே, கல்யாணத்துக்கு அப்புறம் எல்லாம் பொய்ன்னு அவங்களுக்குத் தெரிஞ்சிருந்தா எப்படி இருந்திருக்கும்?”

என்று உண்மையை உரக்க சொல்லுமிடத்தில் கதாநாயகனை விடவும் உயர்ந்து மனதில் பதிகிறார் சக்திவேல்.

 

மொத்தத்தில், குடும்ப பின்னணியில் இருக்கும் நல்ல ஒரு காதல் கதை!

 

வாய்ப்பு கிடைத்தால் தவறாமல் படியுங்கள். படித்தவர்கள் உங்களின் கருத்துக்களையும் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

நன்றி!

நந்தினி

இந்த தொடரின் மற்ற பதிவுகளை படிக்க இங்கே க்ளிக் செய்யுங்கள்.

உங்கள் கதையும் இந்த தொடரில் பங்கு பெற வேண்டும் என்ற விருப்பம் இருந்தால், உங்கள் கதையின் பெயர் மற்றும் உங்களின் பெயர் (அ) புனைப் பெயர் விபரங்களை This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

நேரம் கிடைக்கும் போது படித்து, பிடித்திருந்தால், இங்கே பகிர்கிறேன்.

{kunena_discuss:1141}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.