(Reading time: 2 - 3 minutes)

3. எனக்கு பிடித்தவை - If Tomorrow Comes

If Tomorrow Comes

ங்கள் அனைவரையும் வெகு நாள் கழித்து சந்திப்பதில் மகிழ்ச்சி. இன்று நான் பகிர்ந்து கொள்ள போகும் எனக்கு பிடித்த மற்றுமொறு கதை "If Tomorrow Comes" (ஒருவேளை நாளை வந்தால்..) ஆகும். இந்த நாவலை எழுதியவர் சிட்னி ஷெல்டன் (Sidney Sheldon).

ஒரு சாதாரண நடுத்தர குடும்ப பெண் சந்தர்ப்ப சுழ்நிலையால், ஒரு கொடிய கும்பலின் சதியால் குடும்பத்தை இழந்து, தன் காதலனைஇழந்து, சிறைக்கு செல்ல நேர்கிறது. அங்கே அவள் தன் வயிற்றில் இருக்கும் குழந்தையை இழக்கிறாள். மேலும் பல இன்னல்களை அனுபவிக்கிறாள். ஓரு நிலையில் தன்னை துன்புறுத்தியவர்களை எதிர்த்து நிற்க முடிவு செய்கிறாள். தன் தாயின் தற்கொலைக்கு காரணமானவர்களையும், தன்னை இந்த நிலைக்கு தள்ளியவர்களையும் பழிக்கு பழி வாங்க முடிவு செய்கிறாள்.

இந்த கதையின் பெயரே இந்த கதையில், இந்த பகுதியில் வரும் கீழ்கண்ட பிரபலமான வரியில் இருந்து வந்ததாகும்….

She was going to make them pay… Tomorrow, she thought. If tomorrow comes.

ஒருவேளை நாளை என்று ஒன்று வந்தால்......... அவள் அவர்களை அவர்கள் செயல்களுக்கு விலை கொடுக்க செய்ய போகிறாள்…..

அதன் பின் அவள் அவர்களை எப்படி பழி வாங்கினாள் என்பது மீத கதை. முழு கதையை அறிந்து கொள்ள இந்த இணையதளத்திற்க்கு செல்லவும் http://en.wikipedia.org/wiki/If_Tomorrow_Comes.

இந்த கதையை தழுவிய தொலைகாட்சி சீரியல் ஒன்றும் சன் தொலைகாட்சியில் ஒளிபரப்பானது. ஈஸ்வரி ராவ் கதாநாயகியாக நடித்த அந்த சீரியலின் பெயர் எனக்கு தற்போது நினைவில்லை.

பொதுவாக பெண்களை மையமாக கொண்ட கதைகளையே நான் விரும்பி படிப்பேன். இந்த கதை அந்த வரிசையில் மேலே உள்ளது என்றால் மிகையல்ல. வாய்ப்பு கிடைத்தால் நீங்களும் படித்து பாருங்கள்.... நான் சொல்வதை உண்மை என்று ஏற்று கொள்வீர்கள்.

நந்தினி

இந்த தொடரின் மற்ற பதிவுகளை படிக்க இங்கே க்ளிக் செய்யுங்கள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.