(Reading time: 2 - 4 minutes)

எனக்கு பிடித்தவை - Pride & Prejudice

னக்கு பிடித்த மற்றொரு நாவல் pride and prejudice. Pride என்றால் கர்வம் அல்லது ஆணவம், prejudice என்றால் முன் முடிவு அல்லது தவறான எண்ணம். இந்த கதையில் யாருக்கு கர்வம் யாருக்கு தவறான பாரபட்சமான எண்ணம் என முடிவு செய்வது சற்று சிரமம் தான்.

இந்த கதை 1800ல் இங்கிலாந்தில் நடைபெறுகிறது. கதாநாயகன் டார்சி மேல் மட்டத்தை சேர்ந்தவன் கதாநாயகி எலிசபெத் கீழ் மட்டத்தை சேர்ந்தவள். ஏழையாக இருந்த போதும் எலிசபெத் அறிவும், தன் மதிப்பும் உடையவள். டார்சி-யும் எலிசபெத்தும் ஒருவரை ஒருவர் முதலில் தவறாக புரிந்து கொண்டாலும் பின்னர் எவ்வாறு மற்றவரின் உண்மையான குணங்களைபுரிந்து கொண்டு காதல் வயப்படுகிறார்கள்என்பது தான் கதை. இந்த கதை பற்றி மேலும் தெரிந்து கொள்ள இந்த இணையதளத்திற்கு செல்லுங்கள்http://en.wikipedia.org/wiki/Pride_and_Prejudice.

இந்த கதையை நான் கல்லூரி துணை பாடமாக படித்தேன். அது இந்த கதையின் சுருக்கமான வடிவம் தான். நான் படித்த முதல் ரொமான்டிக் கதை இது தான். இன்றுஇதேபோன்றபல கதைகளை படித்திருந்த போதும் கூட டார்சி-யும் எலிசபெத்தும் தான் இன்று வரை எனக்கு மிகவும் பிடித்த கதாநாயகன் கதாநாயகி.

இந்த கதையை எழுதிய ஜேன் ஆஸ்டின் மற்றும் பல கதைகளை எழுதிய போதும், pride and prejudice க்குஇணையாக என்னை பொறுத்தவரை எதுவும் இல்லை.

இந்த கதையை நான் படித்ததோடு மட்டும் அல்லாமல், A&E தொலைகாட்சிதொடராகவும் பார்த்தேன். அது மட்டும் அல்லாமல் சமீபத்தில் 2005ல் வெளியான ஆங்கில திரைப்படமாகவும் பார்த்தேன். இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான அனுபவம். ஆயினும் A&E series தான் எனக்கு இப்போதுமிகவும் பிடித்த பதிப்பு.

ந்த கதையில் டார்சி-யையும் எலிசபெத்தையும் தவிர என்னை கவர்ந்த மற்ற பாத்திரங்களை பார்ப்போம்:

ஜேன் - எலிசபெத்தின் மூத்த சகோதரி. ஜேனுக்கும் எலிசபெத்திற்கும் இடையில் இருக்கும் பாசமும் பிணைப்பும் இந்த கதையை படிக்கும் எல்லோரையும் நெகிழவைக்கும்.

பென்னெட்- எலிசபெத்தின் தாயார். இந்த கதையின் நகைச்சுவை நடிகை இவர் தான்.

லேடி காதரின் டி பௌர்க் - டார்சி-யின் உறவினர். இந்த கதையின் ஒரு சின்ன வில்லி

இந்த கதையை நீங்களும் படித்திருந்தால் உங்கள் கருத்தையும் சொல்லுங்கள். இல்லை என்றால் இந்த கதையை இங்கு படித்து விட்டு உங்கள் கருத்தை சொல்லுங்கள்.

 நந்தினி

இந்த தொடரின் மற்ற பதிவுகளை படிக்க இங்கே க்ளிக் செய்யுங்கள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.