(Reading time: 4 - 8 minutes)

லைஃப்ஸ்டைல் - இளவரசியாக வாழ்வது எப்படி இருக்கும்!!!!??? - தேன்மொழி

Royal family

ளவரசி ஆக வாழ்ந்தால் எப்படி இருக்கும்ன்னு கனவு கண்டிருக்கிறீர்களா???

உண்மையாக சொன்னால் இளவரசி வாழ்க்கை ரொம்பவே போரான, கஷ்டமான வாழ்க்கை!

நம்ப முடியலையா? அப்போ மேலே படியுங்கள்!

 

இங்கிலாந்து அரச குடும்பம் பற்றி நாம் அனைவருமே கேள்வி பட்டிருப்போம். அந்த குடும்பத்தில் மருமகளாகி இளவரசி பட்டம் பெற்றால், பின் பற்ற ஸ்பெஷல் ரூல்ஸ் இருக்கிறது.

 

அவற்றில் ஐந்து ரூல்கள் இங்கே:

 

1. நோ ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்-அப்

ம்மில் பலரும் காலையில் கண்விழிப்பதே ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் தான்.

ஆனால், அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள் அவர்களுக்கு என தனியே சமூக வலைத்தளங்களில் அக்கவுன்ட் வைத்திருக்கக் கூடாது என்பது கண்டிப்பான சட்டம்.

 

சமீபத்தில் இளவரசர் ஹாரியை திருமணம் செய்துக் கொண்ட மேகன் மார்க்கில் திருமணத்திற்கு முன் ஃபேஸ்புக், இன்ஸ்டாக்ராம் மட்டுமல்லாமல் தனக்கென தனியாக thetig.com எனும் இணையத்தளமும் வைத்திருந்தார்.

ஆனால் இளவரசரை மணமுடிக்க அது எல்லாவற்றையும் மறக்க வேண்டியதானது.

 

2. தனிப்பட்ட கருத்துக்களை பகிர கூடாது

ம்மில் பலரும் இன்றைய நாளில் சோஷியல் மீடியா அல்லது ப்ளாக் மூலமாக அரசியல் மற்றும் பொது கருத்துக்களை பகிருவது என்பது சாதாரண விஷயம்.

 

ஆனால், சோஷியல் மீடியாவில் மட்டுமல்லாமல் டிவி, ரேடியோ, ஊடங்கங்கள் எதிலுமே அரச குடும்பத்தை சார்ந்தவர்கள் தங்களின் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளை பகிரக் கூடாது என்பது இன்னுமொரு ரூல்.

 

யாருக்கும் பார்ஷியலாக தங்களை அரசக் குடும்பத்தினர் காட்டிக் கொள்ள கூடாது என்பதற்காக எழுதப்பட்ட சட்டமாம் இது!

 

3. தொழில்

னக்கென ஸ்பெஷல் career அபிலாஷைகள் இருப்பதும் அதற்காக ஒவ்வொருவரும் கடினமாக உழைப்பதும் இந்த காலத்தில் சாதாரண விஷயம்.

 

ஆனால் அரச குடும்பத்தில் இருந்துக் கொண்டு அப்படி தொழில்த்துறையில் மின்னுவது என்பது கிட்டத்தட்ட நடக்க முடியாத விஷயம்.

இதற்காக தனி சட்டம் இல்லை என்றாலும், அவர்களுக்கு நேரம் இருப்பதில்லை.

 

இங்கிலாந்து இளவரசர் வில்லியம் பைலட் ஆக வேண்டும் என்ற ஆசையை கொண்டிருந்தார். அதற்காக பயிற்சியும் எடுத்துக் கொண்டார். ஆனால் இளவரசராக அவர் கலந்துக் கொள்ள வேண்டிய நிகழ்சிகளுக்கு நடுவே பைலட்டாக இருக்க முடியாமல் அந்த துறையை விட்டு முழுவதுமாக இப்போது விலகி விட்டார்

 

பாவம் தான்!

 

4. பயணம்

சும்மா பீச்சுக்கு போகலாம் போல இருக்கு என நினைத்து குடும்பத்தினர் அல்லது நண்பர்களுடன் கிளம்புபவரா நீங்கள்?

அப்படி என்றால் நீங்கள் அதிர்ஷ்டசாலி தான். ஏனென்றால் அரசக் குடும்பத்தை சார்ந்தவர்களால் அப்படி எல்லாம் எங்கும் பயணம் செய்ய முடியாது.

 

அவர்கள் ஒரு இடத்திற்கு பயணம் செய்ய வேண்டும் என்றால் குறைந்தது ஆறு மாதத்திற்கு முன்பே திட்டமிடல் தொடங்கப் பட வேண்டும்.

 

இது முக்கியமாக அவர்களின் செக்யூரிட்டிக்காக பின்பற்றப் படும் ஒரு பழக்கம். செக்யூரிட்டி கிளியரன்ஸ் இல்லாமல் ஒரு பயணமும் இல்லை!

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.