(Reading time: 3 - 6 minutes)

TV Serials - தி கிரவுன் - நெட்ஃப்ளிக்ஸ் [ The Crown - Netflix ] - சீசன் 1 எபிசோட் 05

இங்கிலாந்தின் தற்போதைய மகாராணி எலிசபெத்தின் கதையை சொல்லும்  2016ல் தொடங்கிய இந்த நெட்ஃபிலிக்ஸ் வெப் சீரீஸின் சீசன் 1 5  ஆம் அத்தியாயத்தின் கதை சுருக்கம் இது. எபிசோட் 4 கதைக்கு தி கிரவுன் - எபிசோட் 4 பக்கத்திற்கு செல்லுங்கள்.

லிசபெத் தன் கணவருடன் அதிக நேரம் செலவிட விரும்புகிறாள். அதற்காகவே பிலிப்பை தன முடிசூட்டு விழா கமிட்டியின் சேர்மேனாக வர சொல்கிறாள். கமிட்டியில் இருப்பவர்கள் தான் சொல்வது எதையும் கேட்கமாட்டார்கள் என்ற தயக்கத்துடன் சம்மதிக்கிறார் பிலிப்.

அவர் சொன்னதைப் போலவே பிலிப்பை கமிட்டியின் சேர்மேனாக்க பலரும் விரும்பவில்லை. இருந்தாலும் பிடிவாதமாக பிலிப்பை சேர்மேன் ஆக்குகிறாள் எலிசபெத்.

மரணப் படுக்கையில் இருக்கும் வயதான அம்மாவைப் பார்க்க எட்வர்ட் இங்கிலாந்து வருகிறார். அப்போது எலிசபெத்தின் முடிசூட்டு விழா பற்றி அவரிடம் பேசுகிறார்கள். விழாவிற்கு அவர் மட்டும் வரலாம், அவரின் மனைவிக்கு அழைப்பு இல்லை என்று திட்டவட்டமாக சொல்லி விடுகிறார்கள். இதனால் எட்வர்ட் கோபப்படுகிறார். எட்வர்டின் அம்மா இறந்து விட்டதாக வரும் செய்தி அந்த பேச்சை பாதியில் நிறுத்துகிறது.

எலிசபெத்துடைய பாட்டியின் இறுதி சடங்கு முழுக்க முழுக்க பழைய கால முறைப்படி நடப்பதை எலிசபெத்திடம் சுட்டிக் காட்டுகிறார் பிலிப்.

எலிசபெத்தின் முடி சூட்டு விழா இதுப் போல இருக்க கூடாது. எலிசபெத் ராணியாவது புது யுகத்தின் தொடக்கமாக இருக்க வேண்டும், அதையே முடி சூட்டு விழாவும் அடையாளம் காட்ட வேண்டும் என்று சொல்கிறார்.

முடிசூட்டு விழா கமிட்டியிடம் தன் கருத்துக்களை சொல்கிறார் பிலிப். வயதில் பெரியவர்களான மற்றவர்கள் பிலிப் எதிர்பார்த்ததைப் போலவே அவரின் கருத்துக்களை ஆதரிக்க மறுக்கிறார்கள். அதிலும் பிலிப் முடிசூட்டு விழாவை டிவியில் லைவ் நிகழ்ச்சியாக ஒளிபரப்ப வேண்டும் என்று சொல்வது பிரளயத்தையே உண்டாக்குகிறது.

டிவி பற்றிய செய்தி எலிசபெத்தை எட்டவும், அதைப் பற்றி பிலிப்பிடம் கேட்கிறாள். அரச குடும்பத்திற்கும் மக்களுக்கும் நடுவே திரை இல்லாமல் இருப்பது நல்லது. மக்களும் முடிசூட்டு விழாவை பார்க்க வேண்டும் என்று பிலிப் வாதிடுகிறார். எலிசபெத்தும் அதை ஏற்று கொள்கிறாள். ஆனால் இந்த பேச்சு இன்னொரு புது விவாதத்தை அவர்களின் முன்னே கொண்டு வருகிறது.

எலிசபெத் ராணியாக முடி சூட்டியப் பிறகு நடக்கும் விழாவில் சம்பிரதாயப்படி பிலிப் அவள் முன் மண்டியிட வேண்டும். அதை செய்ய முடியாது என்று மறுக்கிறார் பிலிப். என் மனைவியிடம் நான் ஏன் மண்டியிட வேண்டும் என்று கேள்வி கேட்கிறார்.

மனைவியிடம் வேண்டாம், ராணியிடம் நீ மண்டியிட்டு தான் ஆக வேண்டும் என்று பதில் சொல்கிறாள் எலிசபெத். இந்த விவாதம் கணவன் மனைவி நடுவே பெரிய சண்டையாக உருமாறி போகிறது.

ஆனாலும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் முடிசூட்டு விழாவில் பிலிப் புது ராணி முன் மண்டியிடவே செய்கிறார்.

இந்த லைவ் நிகழ்ச்சியை ஃபிரான்ஸில் இருந்து தன் மனைவியுடன் பார்க்கிறார் எட்வர்ட். அவர் அதை ரசிக்கவில்லை என்பதை புரிந்துக் கொள்ள முடிகிறது!

ஒரு அரச பரம்பரையின் insider view போன்ற இந்த வெப் சீரீஸ் உலகெங்கும் மிகவும் பிரபலம். நீங்களும் இதன் பார்வையாளர் என்றால் உங்கள் கருத்தையும் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.