(Reading time: 2 - 3 minutes)

கணவன் - மனைவி உறவை மேம்படுத்துவது எப்படி?

Happy couples

1. ங்கள் மனைவிக்கு / கணவருக்கு சம உரிமை கொடுங்கள்.

2. ந்த காரணத்திற்காகவும் சந்தேக விதையை மனதில் விதைத்து விடாதீர்கள். விஷயம் எதுவாக இருந்தாலும் நேரடியாக பேசி பிரச்சனைக்கு முற்று புள்ளி வையுங்கள்.

3. ங்கள் மனைவி / கணவரை சுதந்திரமாக செயல பட அனுமதியுங்கள்.

4. ழைய விஷயங்களை / பிரச்சனைகளை மனதில் வைத்து பேசுவதை தவிர்த்து விடுங்கள்.

5. ணவன் - மனைவி உறவில் 'பகிர்தல்' மிகவும் முக்கியம். எதையும் என் விஷயம் என மனதில் வைத்துக் கொள்ளாமல் உங்கள் மனைவியிடம் / கணவரிடம் பகிர்ந்து பழகுங்கள்.

 i. நீங்கள் உங்கள விஷயங்கள் எல்லாவற்றையும் பகிர்ந்துக் கொண்ட போதும், உங்கள் துணை உங்களிடம் ஏதேனும் விஷயத்தை பகிர்ந்துக் கொள்ளவில்லை என தெரிந்தால் அத்தனை சுட்டிக் காட்டி பிரச்சனை செய்யாதீர்கள்.

ii. றைத்து வைத்த விஷயத்தை பகிர்ந்துக் கொண்டு, உங்களின் துணை ஏதேனும் உதவி கேட்டால், உதவி செய்யுங்கள். 'நீ என்னிடம் சொல்லாமல் மறைத்த விஷயத்திற்கு நான் என்ன உதவுவது' என்று கோபம் கொள்ளாதீர்கள்.

6. ணவன் மனைவி உறவில் comparison எனும் ஒப்பீட்டு பேச்சை முழுக்க முழுக்க தவிருங்கள்! எந்த காரணத்திற்காகவும் (கோபமாக இருந்தாலும் சரி, காதலால் உருகினாலும் சரி!) படிப்பு, பணம், அழகு என அதையுமே ஒப்பிட்டுப் பேசாதீர்கள்.

7. பொதுவாகவே கணவன் மனைவியிடமும், மனைவி கணவரிடமும் அதிகமாக எதிர்பார்ப்பது அன்பு ஒன்றை தான். எனவே உங்களின் துணைவரை புரிந்துக் கொண்டு நடந்துக் கொள்ளுங்கள்.

உங்கள் வாழ்க்கைத் துணையை புரிந்துக் கொண்டு வாழ்வை மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.