(Reading time: 4 - 7 minutes)

குடும்பம் - திருமணத்திற்கு பின்பும் காதல் தொடர  சில டிப்ஸ் - தேன்மொழி

Rekindling romance

 

திருமண வாழ்க்கை என்பது மிகவும் அழகான ஒரு விஷயம்.

எத்தனை நாட்கள் ஆனாலும் அந்த உறவில் இருக்கும் சாரம்சங்களை சுவை குறையாமல் வைத்திருப்பது என்பது இனிமையான அனுபவம்.

இயந்திர வாழ்க்கை முறை, பெற்றோர்கள் பார்த்து நிச்சயித்த நடந்த திருமணம், கட்டுப்பாடான குடும்பம் என எப்படி இருந்தாலும் நம்முடைய சின்ன சின்ன செயல்களால் அன்பை, காதலை குறையாமல் பாதுகாக்கலாம்.

அதை செய்ய சில டிப்ஸ்!

 

தினமும் தூங்குவதற்கு முன் உங்கள் இருவருக்காகவும் நேரம் ஒதுக்குங்கள்.

ணவன் மனைவி உறவு என்பது உடல் மட்டும் சம்மந்தப்பட்டது அல்ல. அதையும் தாண்டி உணர்வுபூர்வமாக இணைந்திருக்கும் பந்தம்.

உங்களுக்காக சில நிமிடங்கள் ஒதுக்கி, பேசுங்கள், பகிருங்கள்...

இந்த ஒரு சில நிமிடங்கள் உங்கள் இருவருக்கும் ஒரு எமோஷனல் பான்ட் கொடுக்கும்.

ரொமான்ஸ் ரீஹாப் எனும் புத்தகத்தில் நம் வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் போல கணவன் மனைவி இடையேயும் கட்டி பிடி வைத்தியம் செய்ய சொல்லி இருக்கிறார்கள்.

இதற்கு அந்த உறவுமுறை எக்ஸ்பர்ட் சொல்லும் காரணம் “இதை உடல் ரீதியாக பார்க்க கூடாது... கணவன் மனைவி இடையே இருக்கும் அன்பு மற்றும் அக்கறை உணர்வை எடுத்துக்காட்ட உதவும் செயலாக பார்க்க வேண்டும்” என்பதே.

 

திருமணமான பின்பும் காதலர்களாக இருங்கள்!

நாட்கள் செல்ல செல்ல கணவன் – மனைவி நடுவே ‘flame’ குறைந்து போவது என்பது நடக்க கூடியது தான்.

அதை தவிர்க்க, மனதில் நிற்கும் பழைய சம்பவங்களை நினைவு கூறுங்கள்.

ஒவ்வொரு ஜோடிக்கும் ஒரு ஸ்பெஷல் மொமன்ட் இருக்கும். அதை விட்டு விடாமல் தொடருங்கள்!

திருமணமான புதிதில் அல்லது திருமணம் நிச்சயித்த பின் வந்த நாட்களில் செய்த சர்ப்ரைசை மீண்டும் செய்து உங்களவருக்கு சர்ப்ரைஸ் கொடுங்கள்.

உதாரணமாக முன்பு சென்ற ரெஸ்டாரண்டிற்கு மீண்டும் அவருடன் செல்லுங்கள்... பழைய நாட்களை பற்றி பேசுங்கள்...!

உங்கள் இருவருக்கும் பிடித்தமான நினைவுகளை பற்றி பேசுங்கள்!

இப்படி எத்தனையோ...!

 

சண்டை போடுவதையும் சரியாக செய்யுங்கள்!

மிஸ்-அன்டர்ஸ்டாண்டிங், விவாதங்கள் போன்றவை எல்லா உறவிலேயும் உண்டு.

அது போன்ற நேரத்தில் சண்டையை எப்படி கையாளுகிறீர்கள் என்பதும் உங்கள் உறவில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

கோபத்தை கத்தி கூச்சலிட்டு காட்டாமல் இயன்ற அளவில் பொறுமையாக பேசுங்கள்.

 

மனதை வெளிபடுத்துங்கள்

பெண்களுக்கு மட்டுமல்லாமல் ஆண்களுக்கும் கூட அவர்கள் ஹான்ட்சமாக இருக்கிறார்கள் என்பதை மனைவி மொழியில் கேட்பதில் ஒரு தனி சந்தோஷமே.

உங்கள் கணவர் ஸ்மார்ட்டாக இருக்கிறார் என்று சொல்லி பாருங்கள், அவர் முகத்தில் தனி பிரகாசம் தெரியும்.

மனதில் இருக்கும் அன்பை, காதலை வார்த்தைகளாலும் சொல்லி பாருங்கள்.

என் மனைவி என்னை விரும்புகிறாள் என்ற ஔணர்வு ஆண்களுக்கு தனி சந்தோஷத்தை கொடுக்க கூடியது என்று பல குடும்ப நல நிபுணர்கள் சொல்கிறார்கள்.

 

வேலைகளை சேர்ந்து செய்யுங்கள்

து ஒரு க்யூட் ஐடியா.

ஒன்றாக சமையல் செய்வது அல்லது சமையலில் உதவுவது என இருவராக சேர்ந்து வேலை செய்து பாருங்கள்.

சமையல் என்று இல்லை, பொருட்களை அரேன்ஜ் செய்வது, வீட்டை சுத்தப் படுத்துவது போன்றவற்றையும் சேர்ந்து செய்யலாம்.

உங்கள் வேலை என்று இல்லாமல், அவர் செய்யும், வேலைகளிலும் நீங்கள் உதவலாம்.

இது உங்கள் இருவருக்கும் கூடுதல் ஸ்பஷல் நேரத்தை தருவதுடன், வேலையை பகிர்ந்துக் கொள்வதால், மனதில் பரஸ்பர மதிப்பையும் தரும்.

 

அவரை ஆச்சர்யப்படுத்துங்கள்!

இது ட்ரைட் அண்ட் டெஸ்டட் விஷயம்!

ஆண்களும் சில சமயங்களில் குழந்தைகள் போல தான்.

அவ்வப்போது சின்னது சின்னதாக இனிய சர்ப்ரைஸ் கொடுத்து பாருங்களேன்! அவருக்கு உங்கள் மீதான ஈடுபாடு பல மடங்கு அதிகரிக்கும்.

பெரிய அளவில் இல்லாமல் சின்ன சின்ன செயல்களே போதும்... அவருக்கு பிடித்த ஸ்வீட் செய்வது... ரொம்ப நாட்களாக நீங்கள் அணியாத அவரின் பேவரைட் உடையை அணிவது, இப்படி...!

 

உங்களை பற்றியும் சிந்தியுங்கள்!

திருமணம் முடிந்து குழந்தைகள், பொறுப்புகள் என்று வந்த உடன், தன்னை பற்றி யோசிக்காமல் விட்டுவிடுவது நம் நாட்டில் நம் பெண்களிடம் பொதுவாக பார்க்கும் ஒரு விஷயம்.

அந்த தவறை செய்யாதீர்கள்.

உங்களையும் பேணி பாதுகாத்து கொள்ளுங்கள்

அழகு என்று மட்டுமல்லாமல் உங்களின் உடல் நலமும் உங்கள் குடும்பத்திற்கு தேவை.

அதே நேரம் உங்களை நல்ல விதத்தில் present செய்யவும் தவறாதீர்கள்.

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.