(Reading time: 2 - 4 minutes)

குடும்பம் - குழந்தைகளின் மூளையை பாதிக்கும் டிவி பார்க்கும் பழக்கம்

child-television

திகமாக டிவி பார்க்கும் பழக்கம் குழந்தைகளை பல விதத்தில் பாதிக்கும் என நிபுணர்கள் சொல்கிறார்கள்.

 

செரிபரல் கோர்டேக்ஸ் எனும் ஜர்னல் 2015ல் வெளியிட்ட ஒரு ஆய்வு அறிக்கையில் அதிகமாக டிவி பார்ப்பது குழந்தைகளின் மூளையின் தன்மையை மாற்றி அமைக்கும் அளவிற்கு சக்தி கொண்டது என்று சொல்லி இருக்கிறார்கள்.

இது ஐந்து முதல் பதினெட்டு வயது வரையிலான 276 குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.

 

தே போல அதிகமாக டிவி பார்த்து பழக்கப்பட்ட மூன்று வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் முழுமையான மொழித் திறன் பெற அதிக நாட்கள் எடுத்துக் கொள்வதாகவும் சொல்கிறார்கள்.

அதிக நேரம் டிவி பார்க்கும் குழந்தைகள் ஸ்கூலில் மற்ற மாணவர்களுடன் சண்டை போடுவது, கோபப் படுவது என சோசியல் மற்றும் பீகேவரியல் திறன்களிலும் பின் தங்கி இருப்பதாக ஆய்வில் சொல்லி இருக்கிறார்கள்.

 

தொடர்ந்து டிவி பார்த்துக் கொண்டே இருக்கும் குழந்தைகள் சிறு வயதிலேயே தங்களின் பெற்றோரை விட்டு மனதளவில் விலகி சென்று விடுவதாக 2013ல் அமெரிக்காவில் சிறிய குழந்தைகளிடம் நடத்தப்பட்ட ஆய்வு முடிவில் தெரிவித்திருக்கிறார்கள்.

 

னவே பெற்றோர்களே உஷாராக இருங்கள்!

 

குழந்தைகளை டிவி பார்க்காமலேயே இருக்க சொல்வது என்பது கடினம் தான்.

 

ஆனால் அவர்கள் எத்தனை நேரம் டிவி பார்க்கிறார்கள், என்ன பார்கிறார்கள் என்று கவனித்து சீர் செய்தால், அந்த டிவி அவர்களின் அறிவை மழுங்க செய்யாமல் காக்கலாம்.

 

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.