(Reading time: 4 - 7 minutes)

குடும்பம் - உங்கள் மனைவியின் முன் ‘ரொமான்டிக் ஹீரோ’ ஆக உங்களைக் காட்டிக் கொள்ள சில சின்ன சின்ன டிப்ஸ்

husband  wife romance

Men are from Mars, Women are from Venus’ என்று ஆங்கிலத்தில் ஒரு பிரபலமான பொன்மொழி இருக்கிறது!

ஆண்களின் உலகமும் – பெண்களின் உலகமும் வேறுபட்டது என சொல்லும் மொழி அது!

இப்படி இரு வேறு உலகங்களை சேர்ந்தவர்கள் ஒன்றாகும் திருமணத்திற்கு பின் டிஷூம் – டிஷூம் வருவதும், என்ன ஏது என்று புரியாமல் குழம்புவதும் இயற்கையானது தான்.

அதுவே தொடர்கதையாகி விடாமல் இருக்க, உங்கள் மனைவியின் முன் ‘ரொமான்டிக் ஹீரோ’ ஆக உங்களைக் காட்டிக் கொள்ள சில சின்ன சின்ன டிப்ஸ்.

 

ங்கள் மனைவிக்கு பிடித்த பைக் அல்லது காரில் நேரம் கிடைக்கும் போது அவர் கேட்காமல் நீங்களே கேட்டு ஒரு ரவுன்ட் அழைத்து செல்லுங்கள்.

 

ங்கள் மனைவியிடம் உங்களுக்கு பிடித்த விஷயங்களை சொல்லுங்கள். அதை பற்றி போர் அடிக்காத அளவில் பேசி சந்தோஷப்படுங்கள்.

 

ங்க மனைவிக்கு ரேடியோ கேட்கும் பழக்கம் இருந்தால், அவர் விரும்பி கேட்கும் எப்.எம்ற்கு போன் செய்து அவர் பெயரை சொல்லி அவருக்கு பிடித்த பாடலை ஒலிபரப்ப சொல்லுங்கள்.

 

லவ் யூ’, ‘நீ எனக்கு ரொம்ப ரொம்ப முக்கியம்’ என அடிக்கடி (மனமார!) சொல்லுங்கள்.

 

னைவியின் படத்தை பர்ஸில் வைத்துக் கொள்ளுங்கள். மொபைல் டிஸ்ப்லேவிலும் வைக்கலாம்!

(ஃபேஸ்புக், வாட்ஸ்-அப் போன்றவற்றில் மனைவியின் படத்தை வைப்பது உங்கள் இருவரின் ப்ரைவசி பொறுத்த விஷயம்!)

 

ங்கள் பிறந்த நாளை மகிழ்ச்சியுடன் மனைவியுடன் நேரம் செலவிட்டு கொண்டாடுங்கள்.

 

தாவது அறக்கட்டளைக்கு மனைவி பெயரில் பணம் கொடுத்து உதவுங்கள்.

 

ங்கள் மனைவியின் விருப்பு – வெறுப்புகளை புரிந்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.

 

சின்ன சின்ன விஷயங்களையும் பாராட்டுங்கள், உங்கள் பிடித்த விதத்தில் அவருக்கு தேங்க்ஸ் சொல்லுங்கள்!

 

ங்கள் மனைவிக்கென செல்லப் பெயர் வைத்து அழையுங்கள்!

 

விழா, பார்ட்டி, பங்க்ஷன் என எதுவாக இருந்தாலும் கூட்டத்தில் இருக்கும் போது, உங்கள் இருவருக்கு மட்டுமே தெரிந்த ஸ்பெஷல் சங்கேத பாஷையில் பேசிக் கொள்ளுங்கள்.

 

பிஸ் கிளம்பும் போதும் சரி, ஆபிசில் இருந்து வீடு திரும்பிய பின்பும் சரி, உங்கள் மனைவியின் கைகளை மென்மையாக பிடித்து ‘பை’, ‘மிஸ்ட் யூ’ etc etc சொல்லுங்கள்.

 

காலையில் பிரிந்து, மாலையில் சந்தித்தாலும், பார்த்து பல நாட்கள் ஆகி விட்டது போன்ற பில்ட்-அப் கொடுங்கள்.

 

ங்களுக்கு டிரஸ் எடுத்துக் கொடுக்கும் உரிமையை உங்கள் மனைவிக்கு கொடுங்கள். உங்களுக்கு பிடித்த டிரஸ் எடுத்தாலும் அவரின் கருத்தையும் கேளுங்கள்.

 

சின்ன சின்ன சர்ப்ரைஸ் கொடுங்கள்.

உங்கள் மனைவியின் பேகினுள் அவருக்கு பிடித்த நிற கைக்குட்டையை வையுங்கள், அவருக்கு பிடித்த பாடல்கள் சிடி வாங்கிக் கொடுங்கள்.

ஏதாவது ஸ்பெஷல் நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்கி வந்து சர்ப்ரைஸ் கொடுங்கள்.

 

னைவியை அலுவலகத்தில் டிராப் செய்யும் பழக்கம் இருந்தால் அவர் உங்கள் கண் பார்வையில் இருந்து மறையும் வரை அவரையே பாருங்கள்! கண் சிமிட்டுங்கள்! பை சொல்லுங்கள்!

 

தெல்லாம் நீ செய்ய வேண்டிய வேலை என பிரிக்காமல், உங்களால் இயன்ற அளவில் வேலைகளில் உதவுங்கள்.

அதற்கான அன்பான அன்பளிப்புகளையும் கேட்டு பெற்றுக் கொள்ளுங்கள்.

 

ங்களின் பேச்சிலும், செய்கையிலும் நீ எனக்கு முக்கியம், நான் உன்னை விரும்புகிறேன் என்பதை சொல்லாமல் சொல்லுங்கள்!

மனைவி தான் எதிலும் விட்டுக் கொடுக்க வேண்டும் என்று நினைக்காமல், சில விஷயங்களில் நீங்களும் விட்டுக் கொடுங்கள்!

 


ங்களால் செய்யக் கூடிய டிப்ஸை முயற்சி செய்து பாருங்கள்!

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.