(Reading time: 2 - 4 minutes)

குடும்பம் - பெற்றோரின் வயதான காலத்திற்கு முன்கூட்டியே திட்டமிடுங்கள்!

indianparents

பெற்றவர்கள் பிள்ளைகளுக்கு திட்டமிட்டு சேர்த்து வைத்து கல்வி, திருமணம் போன்ற செலவுகளை எடுத்து செய்வது போல பிள்ளைகளும் தங்களின் பெற்றோர்களின் வயதான காலத்திற்கு முன்கூட்டியே திட்டமிட்டு செயலாற்றலாம்.

பெரியவர்களுக்கு பிள்ளைகளின் துணை இருந்தாலும் கூட வயதானக் காலத்தில் அவர்களுக்கு என தனி வருமானம் இருப்பது அவர்களுக்கு சுயமரியாதை தருவதாக இருக்கும்.

சின்ன சின்ன விஷயங்களுக்கும் தங்கள் பிள்ளைகளை எதிர்பார்க்கும் நிலைமையை தடுக்கும்!

பெரியவர்களுக்கு ஓய்வூதியம் இருந்தாலும், fixed deposit போன்றவற்றின் மூலம் அவர்களுக்கு மாதாந்திர வருமானம் கிடைக்க வழி செய்யுங்கள்.

ரிஸ்க் குறைந்த முதலீடுகளை செய்தும் அவர்களுக்கு உதவலாம்.

பெரியவர்களுக்கு மருத்துவக் காப்பீடு இருப்பது நல்லது. எனவே உங்களின் பெற்றோரின் உடல் நலத்திற்கு ஏற்ப, அவர்களுக்கு உதவக் கூடிய மருத்துவக் காப்பீடை பெற்றுக் கொடுங்கள்.

அதன் பலன்கள் மற்றும் விபரங்களை மறக்காமல் அவர்களுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

பொதுவாக நம் இந்தியக் குடும்பங்களில் வயதான பெற்றோர்கள் தங்களின் பொருளாதார நிலையை சொந்தக் குழந்தைகளிடம் பேசக் கூட தயங்குவார்கள். எனவே சற்றே கவனத்துடன் நிதானாமாக நீங்கள் செயல் பட வேண்டிய விஷயம் இது!

பெற்றோருக்கு வேண்டியதை செய்து விட்டு, எந்த ஒரு தருணத்திலும் இதை செய்தேன், அதை செய்தேன் என்று சொல்லிக் காட்டக் கூடாது என்பதையும் மனதில் வையுங்கள்!

நமக்கு பார்த்து, பார்த்து எல்லாம் செய்த பெற்றோருக்கு அவர்களின் முதிய காலத்தில் துணையாக இருந்து உதவுவது நம் கடமை அல்லவா!

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.