(Reading time: 4 - 7 minutes)

குடும்பம் - ‘உலகத்திலேயே சிறந்த கணவர்’ உங்கள் கணவர் தானா???

husband  wife romance

லகத்திலேயே சிறந்த கணவர்’ உங்கள் கணவர் தானா என்று தெரிந்துக் கொள்ள கீழே உள்ள விபரங்களை படியுங்கள்.

 

சரியாக இருக்கும் ஒவ்வொரு புள்ளிக்கும் 10 மார்க் கொடுங்கள், இல்லை என்றால் 0 மட்டுமே!

 

1. தன் அம்மாவின் மீது அதிகம் அன்பு வைத்திருப்பவர் உங்கள் கணவர்

ரு ஆண் மகன் நேசிக்கும் முதல் பெண் அவனின் அம்மா.

உங்கள் கணவர் அவருடைய அம்மாவை நேசிப்பவராக, மரியாதையாக நடத்துபவராக இருந்தால், உங்களையும் நேசிப்பார், உங்கள் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுப்பார் என நம்பலாம்.

 

2. உங்கள் கனவுகளை, இலக்குகளை அடைய பக்கபலமாக இருப்பவர்

மேற்படிப்பு, வேலையில் முன்னேற்றம் என உங்களின் கனவுகள், இலக்குகள் எதுவாக இருந்தாலும் உங்களுக்கு ஆதரவாக இருந்து உற்சாகப் படுத்துபவர் உங்கள் கணவர் என்றால் அவர் ‘தங்கமே’ தான்!

 

3. உங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்

ற்றவர்கள் அனைவரையும் விட உங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர், எப்போதும் உங்களுக்கு பக்கபலமாக, உருத் துணையாக இருப்பார் என நம்பலாம்.

 

4. நீங்கள் மனமொடிந்து இருக்கும் போதும் உங்களுக்கு துணையாக நிற்பவர்

ன்பம், துன்பம், நிறை, குறை, சந்தோஷம், வருத்தம் என மேடு பள்ளங்கள் நிறைந்தது தான் வாழ்க்கை.

சந்தோஷமான நேரங்களில் உடன் இருப்பது போலவே, நீங்கள் வருத்தத்துடன் இருக்கும் போதும் உங்களுக்கு ஆதரவாக உங்கள் கணவர் இருப்பார் என்றால் அவர் ஒரு சிறந்த கணவரே தான்.

 

5. குடும்ப பொறுப்புகளை சந்தோஷமாக ஏற்றுக்அ கொள்பவர்!

திருமணமாகி கூடுதல் பொறுப்புகள் வந்து விட்டது என புலம்பாமல், தன் குடும்பத்திற்கு தான் செய்வது என மகிழ்ச்சியுடன் புதிய பொறுப்புகளை ஏற்றுக் கொண்டு, அதை செவ்வனே செய்யக்  கூடியவர் உங்கள் கணவர் என்றால் நீங்கள் அதிர்ஷ்டசாலி தான்.

பொறுப்புகளை ஏற்காமல், வேலைகளை சரியாக செய்யாமல் சோம்பேறியாக கணவன் இருந்தால் அந்த கூடுதல் சுமையும் மனைவியையே வந்து சேரும்!

 

6. அன்பை வார்த்தைகளால் வெளிப்படுத்துபவர்

ங்கள் மீது இருக்கும் அன்பை ‘ஐ லவ் யூ’ மற்றும் இன்ன பிற வார்த்தைகளால் அவ்வப்போது வெளிபடுத்துபவர் உங்கள் கணவர் என்றால் அவர் உங்கள் மீது அதிக அன்பு வைத்திருக்கிறார் என்பதில் கேள்வியே இல்லை!

 

7. வயதிற்கும் அன்பிற்கும் தொடர்பில்லை என நினைப்பவர்

ருடங்கள், வயது என எதையும் கணக்கு வைக்காமல் உங்கள் மீது காதல் மழை பொழிபவர் என்றால், அவர் மனதளவில் உங்களை இன்னமும் இளைஞியாகவே பார்க்கிறார், காதலிக்கிறார் என புரிந்துக் கொள்ளலாம்.

 

8. மனதார பாராட்டுபவர்

ங்களின் சின்ன சின்ன அச்சீவ்மென்ட்களை கூட மனமார பாராட்டுபவர், அதற்காக பெருமை படுபவர் உங்கள் கணவர் என்றால் அவர் ஒரு பொக்கிஷமே தான்!

 

9. டல்லடிக்கும் சாதாரண தினசரி வேலைகளை  கூட மகிழ்ச்சியானதாக மாற்ற கூடியவர்.

வீட்டை சுத்தம் செய்வது, பாத்திரங்களை அடுக்குவது, தேய்ப்பது என போரடிக்கும் வேலைகளையும் பகிர்ந்துக் கொண்டு அல்லது நீங்கள் அதை செய்யும் போது கூட இருந்து அந்த டல்லான நேரத்தையும், சந்தோஷமான நேரமாக மாற்றக் கூடியவர் ஒரு நல்ல துணை என்பதில் சந்தேகமே இல்லை.

 

10. ‘சர்ப்ரைஸ்’ கொடுக்க கூடியவர்.

சின்ன சின்ன பரிசுகள், செய்கைகள், பேச்சுக்கள் என உங்களுக்கு அவ்வப்போது சர்ப்ரைஸ் கொடுக்கும் கணவர் உங்கள் மீது அன்பு வைத்திருக்கிறார் என்பதில் சந்தேகமே இல்லை.

 

வ்வளவு மார்க் வாங்கி இருக்கிறார் உங்கள் கணவர்?

என்னவாக இருந்தாலும் அவரிடம் நீங்கள் எதிர்பார்ப்பதை , பெற்றுக்கொள்வதை அவருக்கும் திருப்பிக் கொடுக்க மறக்காதீர்கள். 

 

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.