(Reading time: 2 - 4 minutes)

குடும்பம் - குழந்தைகளுக்கு சாப்பிட சொல்லிக் கொடுங்கள்

Kids eating

குழந்தைகள் சிறியவர்களாக இருக்கும் போதே அவர்களுக்கு தானாக சாப்பிட சொல்லிக் கொடுப்பது நல்லது.

சின்ன குழந்தைகள் அப்படி சாப்பிட பழகும் போது, அவர்களின் கைகள் மற்றும் கண்கள் இடையேயான ஒருங்கிணைப்பு (co-ordination) வலுவடைகிறது.

சிறு வயதிலேயே சரியான முறையில் சாப்பிட பழகும் குழந்தைகள் வளர்ந்த பின் சபை-நாணம் (social shyness) இல்லாமல் இருப்பார்கள் என்றும் சொல்கிறார்கள்.

 

பெற்றோர்கள் கவனத்திற்கு:

குழந்தைகளுக்கு சாப்பிட சொல்லிக் கொடுக்கும் போது விரல்கள் அல்லது ஸ்பூன் பயன்படுத்தி சாப்பிட சொல்லி தர வேண்டும். அதை சரியாக செய்யவும் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

கை அல்லது ஸ்பூன் பயன்படுத்தி எடுத்து வாயில் வைக்கும் உணவு அதிகமாக இல்லாமல் வாயில் பற்றும் அளவிற்கு சரியான அளவில் இருக்குமாறு எடுக்க சொல்லிக் கொடுக்க வேண்டும்.

தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டோ, புத்தகம் படித்துக்கொண்டோ அல்லது வேறு ஏதாவது செய்துக் கொண்டோ உணவு சாப்பிட குழந்தைகளை அனுமதிக்காதீர்கள்.

குழந்தைகள் சாப்பிடும் போது பொறுமை தேவை! சீக்கிரம், சீக்கிரம் என அவசரப் படுத்தாதீர்கள்.

டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிட்டாலும், கீழே அமர்ந்து சாப்பிட்டாலும் கைகளை சரியாக வைக்க, பயன்படுத்த சொல்லிக் கொடுங்கள்.

 

சிறு வயதில் நீங்கள் சொல்லிக் கொடுக்கும் நல்ல பழக்க வழக்கம் வளர்ந்த பின்னும் அவர்களுக்கு உதவும்.

எனவே குழந்தைகளுக்கு சாப்பிட சொல்லி தர மறக்காமல் நேரம் ஒதுக்குங்கள்.

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.