(Reading time: 2 - 4 minutes)

ஜோக்ஸ் - பாவம் இவர் :-) - அனுஷா
fun

மிழ்நாட்டுல இருந்து ஒரு குடும்பம் ஆஸ்திரேலியாவை சுத்தி பார்க்க போய் இருந்தாங்க.

கணவன், மனைவி, இரண்டு குழந்தைகள், கணவனின் வயதான அம்மா என ஐந்து பேர் கொண்ட குடும்பம் அது!

இடம் சுற்றி பார்க்க ஃப்ரீவேல இந்த குடும்பம் காரில் சென்றுக் கொண்டிருந்த போது, ஆஸ்திரேலிய நாட்டு பெண்மணி ஒருவர் அவரோட கார்ல இவங்க காரின் பின்னே வந்துக் கொண்டு இருந்தார்.

முன்னாடி போற காரையே கவனித்து கார் ஒட்டிக் கொண்டிருந்த இந்த ஆஸ்திரேலிய பெண்மணி, அந்த காரில் இருந்து ஒரு வயதான பெண்மணியின் தலை மட்டும் கார் ஜன்னல் வழியே வெளியே வருவதை பார்த்தார். இந்த பெண்மணி பார்த்துக் கொண்டிருக்கும் போதே அந்த வயதான பெண்மணி ரத்த வாந்தி எடுத்தார்.

ஷாக் ஆகி போனவங்க, உடனே 000 டையல் செய்து அவங்க ஊர் எமர்ஜென்சி சர்விஸ்க்கு தகவல் சொன்னாங்க.

கண்மூடி திறக்குறதுக்கு முன்னாடி ஒரு ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் அந்த இடத்துக்கு வந்தது.

அதில் இருந்த பணியாளர்கள் வேகமா அந்த பாட்டியை ஸ்ட்ரெட்சர்ல வச்சு அழைச்சுட்டு போனாங்க. ஆக்ஸிஜன் கொடுத்துட்டு, டாக்டரும் டெஸ்ட் செய்தார்.

ஒரு சில நிமிடங்கள் கழித்து அந்த வயதான பெண்மணி நலமாக இருக்கிறார்ன்னு சொல்லி அவங்க அவங்களோட ட்ரிப்பை தொடர அனுமதித்தாங்க!

எல்லோரும் அந்த ஆஸ்திரேலிய பெண்மணியை மனமார பாராட்டினாங்க.

இதுல ஜோக் எங்கேன்னு யோசிக்குறீங்களா? சொல்றேன் இருங்க!

மேல சொன்ன எமர்ஜன்சி மருத்துவ சேவைக்கு நம்ம ஆளு 3500 ஆஸ்திரேலிய டாலர் கட்ட வேண்டியதா போச்சு!

எதிர்பார்க்காமல் ஏற்பட்ட இந்த செலவுல கடுப்பாகி போன அவர், அம்மாவை பார்த்து கத்தினார் பாருங்க!

“ஏம்மா, வெத்தலையைப் போட்டு எச்சில கார்ல இருந்து துப்பாதேன்னு சொன்னா கேட்க மாட்டீயா?”

!@#$%^&*()

 

innocentinnocentinnocent

 

innocentlaughing

laughinglaughinglaughing

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.