(Reading time: 3 - 6 minutes)

Tamil Jokes 2018 - உப்புமா ஸ்பெஷல்!!! :-) - தேவி

fun

சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?

 

நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்படலாம். பொருளில்தான் குற்றமிருக்கிறது.

 

சிவன் : என்ன குற்றம் கண்டீர்?

 

நக்கீரர் : எங்கே தாங்கள் இயற்றிய செய்யுளைச் சொல்லும்?

 

சிவன் : தின்பதோ வாழ்க்கை வேலை வேறில்லை தம்பி 

ஓமம் சேர்க்காமல் கண்டதும் உளதே 

கடுகும், பருப்பும், மிளகாயும் சேர்த்து 

எண்ணெயில் தாளித்த பாவையே! இதை விடுத்து 

வேறுண்டோ நீயறியும் ரவா உப்புமாவே!

 

நக்கீரர் : இப்பாட்டின் உட்பொருள்?

 

சிவன் : நாடார் கடையில் உள்ள மளிகைப் பொருட்களை எல்லாம் வரிசையாக வாங்கிக் குவிக்கும் பெண்ணே! நீ கண்ட பொருட்களில் ரவாவைப்போல் வேறு அரியவகைப் பொருள் உண்டோ! அதில் நீ செய்த ரவா உப்புமாவிற்குத்தான் ஈடு இணை உண்டோ? என்பதே இதன் பொருள்.

 

நக்கீரர் : இப்பாட்டிலிருந்து எம்மன்னருக்குத் தாங்கள் கூறும் முடிவு?

 

சிவன் : ஹஹஹா! புரியவில்லை? பெண்களுக்கு இயற்கையிலேயே ரவா உப்புமா செய்யும் ஆற்றல் உண்டு என்பதுதான் நான் கூறும் முடிவு.

 

நக்கீரர் : ஒருக்காலும் இருக்க முடியாது. அன்னையிடம் சமையல் நன்றாகக் கற்றுக் கொள்வதாலும், தொடர்ந்து சமையல் செய்யத் தெரிந்திருந்தால் மட்டுமே இது சாத்தியம்.

 

சிவன் : தேவலோகப் பெண்களுக்கு?

 

நக்கீரர் : அவர்களுக்கும்தான்

 

சிவன் : சாப்பிட்டு சாப்பிட்டுத் தூங்கித் தூங்கி வழிகிறானே கும்பகர்ணன்? அவன் மனைவிக்கும் இதே கதிதானோ?

 

நக்கீரர் : அவளென்ன! நான் அன்றாடம் என் நினைவில் வைத்திருக்கும் சமையற்கலை வல்லுனன் நளமகராஜனின் இடப்பக்கம் அமர்ந்துள்ள தமயந்திக்கும் இதே கதிதான்.

 

சிவன் : அங்காடியில் விழுந்து புரண்டு அரிசியும் பருப்பும் தலையில் சுமந்து டெபிட் கார்டில் உள்ள மினிமம் பேலன்ஸும் கரைத்து வீட்டிற்கு சென்று ஏன் தாமதமாக வந்தாய் என பல்பு வாங்கும் கீரனோ எம் கவியை ஆராய்ந்து சொல்லத் தக்கவன்?

 

நக்கீரன் : பல்பு வாங்குவது எங்கள் குலம், 

சங்கரனார்க்கு ஏது குலம்? – பல்பை 

டெஸ்ட் செய்து வாங்குவோம்! உன்னைப் போல் 

ஃப்யூஸ் போன பல்பாக ஒரு போதும் இருக்க மாட்டோம்!!

 

சிவன் : நக்கீரா! நன்றாக என்னைப் பார். நான் எழுதிய தமிழ்ப் பாட்டில் குற்றமா?

 

நக்கீரர் : நீரே முக்கண் முதல்வராயும் ஆகுக. உமது நெற்றியில் ஒருகண் காட்டிய போதும் உடம்பெல்லாம் கண்ணாக்கி சுட்ட போதிலும் குற்றம் குற்றமே! "நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே"

 

சிவன் : நக்கீ. . . . . .ரா!

 

மன்னர் : இறைவா! சொக்கநாதா! ஜோதிச் சுடரே! ஆராயாமல் எதிர்வாதம் செய்த நக்கீரனை மன்னிக்க வேண்டும். விலை மதிப்பற்ற எங்கள் தலைமைப் புலவனை மீண்டும் உயிர் பெறச் செய்ய வேண்டும்.

 

சிவன் : செண்பகப் பாண்டியா! சினம் இல்லை எமக்கு. வேதனையை விடு. எமது விளையாட்டுக்களில் இதுவும் ஒன்று. கொதிக்கும் ரேஷன் கடை பாமாயிலை மேலே ஊற்றியதால் ஏற்பட்ட காயத்தின் வெம்மை தாளாமல் அவதியுறும் நக்கீரர் நலமுடன் எழுந்து வருவார்.

 

நக்கீரர் : இறைவா! பரம்பொருளே! 

உப்பும் நீயே! 

பருப்பும் நீயே! 

கோல்டு வின்னரும் நீயே! 

பாசுமதி ரைஸும் நீயே! 

கத்தரிக்காயும் நீயே! 

புடலங்காயும் நீயே! 

வெங்காயமும் நீயே!

தக்காளியும் நீயே!

 

அறியாமல் வாதம் செய்த என்னை மன்னியுங்கள்.

 

சிவன் : நக்கீரரே! உம் தமிழோடு விளையாடவே யாம் வந்தோம். வந்திருப்பது இறையென்றறிந்தும் சாப்பாட்டின் மீது உங்களுக்கிருந்த பற்றின் காரணமாக "நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே" என்று வாதிட்ட உங்கள் வாதம் வெகு சூப்பர்!

Dedicated to all upma lovers!!

 

innocentinnocentinnocentinnocent

laughinglaughinglaughing

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.