(Reading time: 2 - 3 minutes)

Tamil Jokes 2018 - என்னால முடியலப்பா :-) - தேவி

fun

ரு பொண்ணும் ஒரு பையனும்❤ காதலிக்கிறர்கள்.

அவர்கள் காதல் பெண் வீட்டுக்கு தெரிந்ததும்... பெண்ணுக்கு வேறு திருமணம்👫 செய்ய ஏற்பாடு நடக்கிறது.

இதை அறிந்த பெண் யாருக்கும் தெரியாமல்
'இனி உங்கள் முகத்தில் முழிக்க மாட்டேன்' என கடிதம் எழுதி வைத்து விட்டு பையனோடு 💑ஊரை விட்டு ஓடி🏃🏽‍♀🏃🏿 விடுகிறாள்.

மறுநாள் பெண் வீட்டாரும் பெண்ணை எங்கெங்கோ தேடி அலுத்துப்போய்,
இனி அந்த பெண் வந்தாலும் ஏற்பதில்லை என முடிவு செய்தனர்.

இப்பதான்✍ கதையில் திருப்பம்.

முன்று நாள் கழித்து அந்த பெண் தானாக, பையன் இல்லாமல் வருகிறாள்.😌

வாசலில் நிறுத்தி அவளை திட்டுகிறார்கள் பெற்றோரும், அண்ணனும்.....😡😡

அப்பா : "இப்ப எதுக்கு வந்த? உனக்கு என்ன வேணும்?"

அம்மா : "ஊரார் முன்னாடி எங்களை கொன்னுட்டே! இப்ப எங்கடி வந்த?"

அண்ணன் : "ஏன் மறுபடியும் வந்து தொல்லை பண்றே? உனக்கு என்னதான் வேணும். சொல்லித் தொலை?"

மூன்று பேரும் அவளுடைய பதிலுக்காக பரபரப்பாக காத்திருக்கின்றனர்......

அவள் சொன்ன பதிலை கேட்டு அந்த முன்று பேர் மட்டும் அல்ல!

இந்த உலகமே அதிர்ந்தது. 😳🙄🙄

அந்த பதில் என்ன?

"என்னுடைய நோக்கியா சின்ன பின் சார்ஜர் மறந்து வைச்சிட்டு போயிட்டேன். 

அதை எடுத்துட்டு போயிடுறேன்மா."

😜😜😜😜😜😜😜

கதையின் நீதி :
நோக்கியா போன் மூன்று நாளுக்கு சார்ஜ் நிற்கும். .

😂என்னால முடியலப்பா......
😂😂😂😂😂😂😂

 

innocentinnocentinnocentinnocentinnocent  

laughinglaughinglaughinglaughinglaughing

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.