(Reading time: 2 - 3 minutes)

Tamil Jokes 2018 - பாத்தியா, பாத்தியா... தங்கமா ஜொலிக்குது உன் முகம்...! :-) - அனுஷா

fun

"வினிங் எங்காவது போகலாமா? போர் அடிக்குது" கேட்டது மனைவி.

"லலிதா ஜுவெல்லரி போவோம்"

"ரியலி !"

"உனக்கு பிடிச்ச நகையை செலக்ட் பண்ணிக்கோ"

"நிஜமாகவா?"

"அங்கே ஒரு எஸ்டிமேட் வாங்கிப்போம்"

"வெரி குட் !"

"அப்படியே அந்த எஸ்டிமேடை எடுத்துக்கிட்டு கல்யான் ஜுவெல்லர்ஸ், GRT, உமிடியார்ஸ் மற்றும் சரவணா போவோம். கடைசியா எல்லா எஸ்டிமேட்டையும் எடுத்துக்கிட்டு சரவண பவன் போவோம்."

"அப்பறம்..."

"தோசை, சப்பாத்தி, இட்லினு விதவிதமா சாப்பிடுவோம். சாப்பிடும் போதே எஸ்டிமேட்களை வைத்து சீரியஸா டிஸ்கஸ் பண்ணுவோம்."

"ஓகே..."

"வீட்டுக்கு போவோம்"

"அப்புறம்"

"அடுத்த வாரம் ரொம்ப போர் அடிக்கும் இல்லையா... அப்ப திரும்ப லலிதா போவோம். இன்னொரு நகையை செலக்ட் பண்ணி எஸ்டிமேட் வாங்கி அந்த எஸ்டிமேடை எடுத்துக்கிட்டு கல்யான் ஜுவெல்லர்ஸ், GRT, உமிடியார்ஸ் மற்றும் சரவணா போவோம். எல்லா எஸ்டிமேட்டையும் எடுத்துக்கிட்டு சரவண பவன் போவோம். தோசை, சப்பாத்தி இட்லினு சாப்பிடுவோம். சாப்பிடும் போதே எஸ்டிமேட்களை வைத்து சீரியஸா டிஸ்கஸ் பண்ணுவோம் ..."

மனைவியின் முகம் நெருப்பில் போட்ட தங்கம் போல் சிவந்து கொண்டிருந்தது.

பாத்தியா, பாத்தியா... தங்கமா ஜொலிக்குது உன் முகம்... சூப்பரா இருக்கு... உன் அழகே அழகுதான்... இணையே இல்லை, கண்ணாடில போய் பாரேன்....

 

!@#$%^&*()

 

😃😃😃😃😃😃😃

 

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.