(Reading time: 1 - 2 minutes)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2019 - எல்லாம் இரண்டா? 🙂 - ரவை

சாலையில் வயதான ஜோடி ஒன்று நடந்து போய்க் கொண்டிருந்தது.

பாட்டியின் வலது கையில் வாக்கிங் ஸ்டிக்! இடது கை, தாத்தாவின் கையை பிடித்து நடந்தது!

அதைப் பார்த்து, ஒருவன், கிண்டலாக "பாட்டிக்கு ரெண்டு வாக்கிங் ஸ்டிக்! என்ஜாய்!" என்று சொல்லிவிட்டு நகர்ந்தான்.

பாட்டிக்கு அவமானம் தாங்காமல் பரிதாபமாக, தாத்தாவை ஏறிட்டு நோக்கினாள். அவள் கண்களில் நீர் தளும்பியது.

"அசடு! இதற்குப் போய் கலங்கலாமா? நல்லவேளை! அவன் 'பாட்டிக்கு ரெண்டு ஹஸ்பண்டா! என்ஜாய்!'னு சொல்லாமல் போனானேன்னு சந்தோஷப்படு!"

பாட்டியும் சிரித்தாள்!

!@#$%^&*() 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.