Latest Tamil Jokes - சொர்கத்துல கிரிக்கெட்! 🙂 - அனுஷா
ஜீவாவும், பிரபாவும் ரொம்ப, ரொம்ப வருஷமாகவே க்ளோஸ் பிரென்ட்ஸ். ஹாஸ்பிட்டல்ல மரணத்தின் பிடியில் இருந்த பிரபாவை ஜீவா சந்திச்சு பேசினார்.
"சொர்க்கத்தில கிரிக்கெட் இருந்தா நீ என் கிட்ட சொல்வீயா?”
பிரபாவும் சரி என்று தலை ஆட்டினார்.
கொஞ்ச நேரத்துல பிரபா இறந்துட்டார்.
அன்னைக்கு நைட் ஜீவா தூங்கிட்டு இருந்தப்போ, அவர் கனவில பிரபாவோட குரல் கேட்டது.
"சொர்க்கத்தில இருந்து பேசறேன் ஜீவா. ஒரு நல்ல செய்தி இருக்கு, ஒரு கெட்ட செய்தியும் இருக்கு!”
"நல்ல செய்தியை முதல்ல சொல்லு,”ன்னு ஜீவா சொன்னார்.
பிரபா சொன்னார், “சொர்க்கத்தில கிரிக்கெட் இருக்கு. கெட்ட செய்தி என்னன்னா, வர செவ்வாய்கிழமை விளையாடுற மேட்ச்ல உன் பேரும் டீம்ல இருக்கு!"
🙄🙄🙄 @!#@%$&^*(*()_++!!!!!
😂😂😂😂