Jokes - Chillzee Team
அப்பா: கண்ணா.... ராத்திரி தூங்கும் போது செல்போனை சார்ஜ்ல போடாதப்பா!
மகன்: ஏம்ப்பா...?
அப்பா: பேட்டரி சூடானா எப்போவாவது வெடிக்கவும் செய்யலாம்!
மகன்: அது தெரியும்ப்பா... அதனால தான் சார்ஜ்ல போடும் போது பேட்டரியை கழட்டி வச்சிடுவேன்!
அப்பா: என்னடா உன் அம்மா காலைல இருந்து பேசாம இருக்கா?
மகன்: அம்மா லிப்ஸ்டிக் கேட்டாங்க நான் தெரியாம fevistick வாங்கி கொடுத்துட்டேன்பா...
அப்பா: நீ என் மகன் இல்லடா... என் சாமி...
டேய் கண்ணா.... கடைக்கு போய் நாலு நாட்டுக் கோழி முட்டை வாங்கிட்டு வாடா!
சரிம்மா.... அந்த நாலு நாடும் எது எதுன்னு பேரை சொல்லுங்க!