ஜோக்ஸ் - மனைவிடா!!! யாருக்கிட்ட!!!! :-) - அனுஷா

பழைய ஜோக், புது ட்விஸ்ட்!!!!!
இது பழசு....
கணவன் : "உன் பெயர் என்ன.?"
மனைவி: என்ன, தெரியாத மாதிரி கேட்கிறீங்க.?"
கணவன்: "ப்ச்...சொல்லு.."
மனைவி: "தங்கம்.....ஏன்?"
கணவன்: "இனி என்னால உன்ன வச்சுக்க முடியாது..."
மனைவி: "ஏங்க திடீர்னு இப்படி சொல்றீங்க..?"
கணவன்: "கவர்ன்மென்ட்ல அரை கிலோ தங்கம் வச்சுக்கத்தான் பர்மிஷன் கொடுத்து இருக்காங்க....நீ 68 கிலோ இருக்க.."
இது புது ட்விஸ்ட்...
மனைவி: ஆமாங்க நானும் உங்கள வச்சிக்க முடியாது போல...
கணவன்: என்னடி உடம்பு எப்படி இருக்கு?
மனைவி: ஆமாங்க, உங்க பெயரு மணி! அதுவும் கருப்பா வேற இருக்கீங்க... கவர்ன்மென்ட்ல black money இருந்தா பிடிச்சு கொடுக்க சொல்லி இருக்காங்களே, என்ன பிடிச்சு கொடுத்துறலாமா?!?!?!
கணவன்: !@#$%^&*
மனைவி: யார்கிட்ட?!? ![]()
ஒரு கணவன் தனக்கு நல்ல ஒரு மனைவி தந்ததற்காக கடவுளுக்கு நன்றி சொன்னான்...
பின் கடவுளிடம், "ஏன் என் மனைவியை இவ்வளவு அன்பானவளாக அக்கறை உள்ளவளாக படைத்தீர்கள்?" என்றுக் கேட்டான்.
கடவுள், "நீ அவளை விரும்ப வேண்டும் என்பதற்காக தான்..." என்று பதிலளித்தார்.
மனிதனும் விடாமல், "ஏன் அவளை இவ்வளவு அழகானவளாக படைத்தீர்கள்..?" என்றுக் கேட்டான்.
கடவுள் மீண்டும், "நீ அவளை விரும்ப வேண்டும் என்பதற்காக தான்..." என்று பதிலளித்தார்.
மனிதன் இப்போதும் விடாமல், "ஏன் அவளை இப்படி ஒரு சமையல் எக்ஸ்பெர்ட் ஆக படைத்தீர்கள்?" என்றுக் கேட்டான்.
கடவுள் இப்போதும், "நீ அவளை விரும்ப வேண்டும் என்பதற்காக தான்..." என்று பதிலளித்தார்.
கொஞ்சம் கோபமாக, "எல்லாம் சரி ஆனால் ஏன் அவளை இப்படி ஒரு முட்டாளாக படைத்தீர்கள்?" என்றுக் கேட்டான் அவன்.
கடவுள் சொன்னார்....
"அவளும் உன்னை விரும்பி ஆக வேண்டுமே, வேறு என்ன செய்ய...?!!!!!" ![]()

{kunena_discuss:747}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.