(Reading time: 1 - 2 minutes)

ஜோக்ஸ் - தொப்பையினால் ஏற்படும் பயன்கள் :) - அனுஷா

fun

தொப்பையினால் ஏற்படும் பயன்கள்:

1. கீழே குப்புற விழுந்தால் முகத்தில் அடிபட்டு மூக்கு உடையாமல் நம்மை காப்பாற்றுகிறது.

2. சமுதாயத்தில் ஒரு மரியாதையை ஏற்படுத்துகிறது.. மரியாதை கலந்த பயம் ஏற்படும்.

3. சிறந்த பொழுதுபோக்கு சாதனமாக பயன்படுகிறது. உதாரணமாக வேலையில்லாமல் சும்மா அமர்ந்திருக்கும் சமயத்தில் தொப்பையை மெதுவாக வருடிக்கொடுத்துக் கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது.

4. மல்லாக்க படுத்து இருந்தால் குழந்தைகள் சறுக்கு விளையாட்டு விளையாட மிகவும் பயன்படும்.

5. தொப்பையானது தத்துவத்தின் சின்னமாகும்.

இந்த உலகமானது தொப்பையைப் போலவே உருண்டை வடிவமானது. இந்த வாழ்க்கையும் வட்ட வடிவமானது.

இதை மனிதனுக்கு உணர்த்துவதற்காகவே இயற்கையானது மனிதனின் தொப்பையை உருண்டை வடிவத்தில் படைத்துள்ளது.

வ்வளவு சிறப்புகள் வாய்ந்த தொப்பையை நாம், போற்றி வளர்ப்போம்! கண்டதையும் போட்டு வளர்ப்போம்!!

ROTFL

 

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.