(Reading time: 3 - 6 minutes)

ஜோக்ஸ் - கல்யாணத்துக்கு முன் vs கல்யாணத்துக்கு பின் :-) - அனுஷா

fun

கேள்வி : உங்க பொண்டாட்டிகிட்ட உங்களுக்கு பிடிக்காத விஷயம் என்ன?

 

கல்யாணத்துக்கு முன்: ம்... (கொஞ்சம் யோசித்து) அப்படி எதுவும் பெருசா இல்ல... ஒண்ணு வேணா சொல்லலாம், என்னை பத்தி ரொம்ப யோசிச்சு டென்சன் ஆய்டுவா, அவ்ளோ அக்கறை என் மேல.

 

கல்யாணத்துக்கு பின் : அட போங்க பாஸ், அது இருக்கு ஒரு மொழத்துக்கு. முக்கியமா சொல்லணும்னா, எப்ப பாத்தாலும் நான் என்ன பண்றேங்கறதே யோசனை, அதை வெச்சே டார்ச்சர். ச்சே..........

 

கேள்வி : உங்க பொண்டாட்டிகிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம்?

 

கல்யாணத்துக்கு முன்:: எதையும் மனசுல வெச்சுக்க மாட்டா, அப்படியே பேசிடுவா... எனக்கு அந்த வெளிப்படையான குணம் ரொம்ப பிடிக்கும்... சோ ஸ்வீட் யு நோ...

 

கல்யாணத்துக்கு பின்: சரியான பஜாரிங்க அது... கொஞ்சம் கூட முக தாட்சண்யமே பாக்காம பிசாசு மாதிரி திட்டும். அடுத்தவன் மனசு எவ்ளோ பீல் பண்ணும்னு யோசிக்கவே மாட்டா ராட்சசி.....

 

கேள்வி : ஒருவேள உங்க பொண்டாட்டி உங்களுக்கு கிடைக்காம இருந்துருந்தா?

 

கல்யாணத்துக்கு முன் : ப்ளீஸ், விளையாட்டுக்கு கூட அப்படி சொல்லாதீங்க. என்னாலே நெனச்சே பாக்க முடியல.

 

கல்யாணத்துக்கு பின் : ஹும்....(பெருமூச்சு) என்னத்த யோசிச்சு என்னத்த... போங்க பாஸ், நமக்கேது அந்த அதிஷ்டம் எல்லாம்..........

 

கேள்வி : உங்களுக்குள்ள சண்டை வருமா?

 

கல்யாணத்துக்கு முன் : சும்மா செல்ல சண்டைகள் அப்ப அப்ப வர்றது தான், மத்தபடி சீரியஸ் சண்டைகள் எப்பவும் வந்ததில்ல. அவளுக்கு கோபம் வரும் போது ரொம்ப கியூட்டா இருப்பா, அதை பாக்கவே செல்ல சண்டை போடலாம்னு தோணும்

 

கல்யாணத்துக்கு பின் : நல்லா கேட்டீங்க போங்க, அது வராம இருந்தாத்தான் அதிசயம். சரியான பிடிவாதம். அவளுக்கு கோபம் வந்தா மனுஷன் பாப்பானா, அதுக்கே கண்ணு முன்னாடி நிக்காம வெளிய போய்டுவேன்....

 

கேள்வி :உங்க பொண்டாட்டி சமையல்ல உங்களுக்கு பிடிச்சது?

 

கல்யாணத்துக்கு முன் : என்னங்க கேள்வி இது? ஏன் அவதான் சமைக்கணுமா? இன்னும் எந்த காலத்துல இருக்கீங்க? அவள உள்ளங்கைல வெச்சு தாங்கனும்னு நான் நெனச்சுட்டு இருக்கேன். ஆனா இந்த விஷயம் சொல்லியே ஆகணும், நான் ஒரு வாட்டி ஆனியன் பஜ்ஜி செஞ்சுருந்தா, செம டேஸ்டி... சந்தோசத்துல எனக்கு கண்ணுல தண்ணி வந்துடுச்சு போங்க .

 

கல்யாணத்துக்கு பின் : அட ஏங்க நீங்க வேற அந்த வயிதெரிச்சலை கொட்டிக்கறீங்க? அநியாயத்துக்கு சமத்துவம் பேசுவா... ஸ்ஸ்ஸ்ஸ்பப்பா ஒரு வெங்காய பஜ்ஜி செய்யனும்னா கூட நான் வெங்காயம் வெட்டி தரனும் அவ பஜ்ஜி போடுவா... வெங்காயம் வெட்டி வெட்டியே கண்ணுல தண்ணி நிக்கலங்க.

 

கேள்வி : உங்க பொண்டாட்டி உங்ககிட்ட அடிக்கடி கேக்கற கேள்வி?

 

கல்யாணத்துக்கு முன் : டூ யு லவ் மீ? இதான் தினமும் கேப்பா. ஒரு ஒரு வாட்டி அவ இதை கேக்கும் போதும் இன்னும் லவ் அதிகமாய்டும் எனக்கு

 

கல்யாணத்துக்கு பின் : டூ யு லவ் மீ? இதான் தினமும் கேப்பா. சரியான சந்தேக பிராணிங்க அது, தினமும் கேட்டு கேட்டு கன்பார்ம் பண்ணிக்கணும் அவளுக்கு... ஹும் .......

 

கேள்வி : உங்க பொண்டாட்டிய செல்லமா எப்படி கூப்பிடுவிங்க?

 

கல்யாணத்துக்கு முன் : ம்... ஒண்ணு ரெண்டு இருந்தா சொல்லலாம்... அது பெரிய லிஸ்ட் இருக்கே. சாம்பிள்'க்கு 'ஸ்வீட்டி', 'ஏஞ்சல்', 'பேபி' இன்னும் நிறைய இருக்கு.

 

கல்யாணத்துக்கு பின் : ஹ்ம்ம்... அது ஒண்ணு தான் கொறச்சல். பேசினாலே சண்டை தான் வரும், இதுல எங்கத்த செல்லமா கூப்பிடறது?

laughinglaughing 

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.