(Reading time: 4 - 8 minutes)
Krishna Jayanthi

கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு கீதம் சங்கீதம்....- 18 - தேவி

ணக்கம் நட்புக்களே.

கீதம் சங்கீதம் . கர்நாடக இசைப் பாடல்கள் அதைப் பற்றி எனக்குத் தெரிந்த சில விவரங்களைப் பகிர்ந்து கொள்ளும் தொடர்.

யாரைக் கொண்டாட மறந்தாலும் கிருஷ்ணனை மறப்பதில்லை. அதனால் தான் இந்த முறை கோகுலாஷ்டமி மற்றும் கிருஷ்ண ஜெயந்தி அன்று அவரைப் பற்றிய ஒரு ஸ்லோகம் அதன் அர்த்தங்களோடு பகிர்ந்து கொண்டு இருக்கிறேன்.

மதுராஷ்டகம் இந்த ஸ்லோகத்தின் பெயர். மதுரம் என்றால் இனிமை என்று பொருள். கண்ணனை விட இனிமையான ஒரு தெய்வம் உண்டோ. அவன் கடவுள் மட்டுமா? யசோதையின் மைந்தனும் கூட. குசேலனுக்கு நல்ல நண்பணும் கூட. கோபியர்களின் நாயகனும் அவனே. திரௌபதியின் சகோதரனும் அவனே. பாண்டவர்களின் ஆலோசகனும் அவனே. சகுனிக்கு எதிரியும் அவனே. கீதையின் சாரமும் அவனே. அனைத்தும் அவனே. அனைத்திற்குள்ளும் அடங்குபவனும் அவனே.

அப்பேற்பட்டவனிடத்தில் இனிமையானவை என்ன என்ன என்று விளக்கும் ஸ்லோகமே இது. ஸ்லோகத்தை இயற்றியது ஸ்ரீ மத் வல்லபாச்சார்யர். பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர் மிகப் பெரிய பண்டிதர். தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர் , சமஸ்க்ரிதத்தில் பாண்டித்யம் பெற்றவர்.

கிருஷ்ணரே பரம்பொருள் என்றக் கொள்கை உடையவர். இவர் பக்தி மார்க்கத்தில் இறைவனை அடையும் வழியை உபதேசித்தவர்.

அஷ்டகம் என்றால் எட்டு என்று பொருள். கிருஷ்ணரை இனிமையானவன் என்று எட்டு சுலோகங்களில் சொல்கிறார். அதுவே மதுராஷ்டகம்.

மதுராஷ்டகத்தில் முதல் ஸ்லோகத்தில் கண்ணனின் உதடு, முகம், கண்கள் , அவன் சிரிப்பு, அவனின் அன்பு மயமான உள்ளம் என அனைத்துமே இனிமையானது என்கிறார். இனிமையின் கடவுள் அவனே .

இரண்டாவது சுலோகம்     அவன் பேச்சு, குணம், அணிமணிகள், அசைவுகள், பாவனைகள் , எங்கும் எதிலும் சுற்றுவது என அனைத்துமே இனிமை.

மூன்றாவது சுலோகம் - அவன் புல்லாங்குழல் இசை, அவன் பாத துளி, கைகள், அவனின் நடை, ஆடல் , அவன் நட்பு அனைத்தும் இனிமை.

நான்காவது சுலோகம் – அவன் பாடல், பால் குடிப்பது, சாப்பிடுவது,  தூக்கம், அவனின் அழகு, அவனின் திலகம் அனைத்தும் இனிமை.

ஐந்தாவது சுலோகம் – அவனின் செயல்கள், வெற்றி, திருடுவது, விளையாட்டு , அவன்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.