(Reading time: 4 - 8 minutes)
Krishna Jayanthi

கொடுப்பது என அனைத்துமே இனிமை.

ஆறாவது சுலோகம் – அவன் கழுத்தாரம், பூந்தோட்டம், அவன் பாதம் பட்ட யமுனை நதியும், நதியின் அலையும், தாமரை மலர்களும் இனிமையே.

ஏழாவது சுலோகம் – கோபிகைகள், கோபிககளோடு அவனின்  ஆட்டம், அவர்களோடான சந்திப்பு, அவர்களைக் காப்பாற்றுவது, அவனின் அழகான நீண்ட கண்கள், என அனைத்துமே இனிமை.

எட்டாவது சுலோகம் – அவனின் கோகுல நண்பர்கள், அவனின் பசுக்கள், பசுக்களை மேய்க்க வைத்திற்குக்கும் கம்பு, அவனின் படைப்பு, வெற்றி, என அனைத்துமே இனிமை.

இத்தனை இனிமைகளைச் சொல்லி, ஒவ்வொரு ஸ்லோகத்தின் கடைசி வரியில் இனிமைகளுக்கு எல்லாம் இனிமையானவன் கண்ணன் என்று கூறி முடிக்கிறார்.

இந்த இனிமையானவனுக்கு அவன் பிறந்த ஆவணி மாதம் அஷ்டமி திதியில் ரோகினி நட்சத்திரத்தில் ஆட்டம், பாட்டம் , கொண்டாட்டத்தோடு பலவகையான இனிப்புகளையும், பலகாரங்களையும் செய்து அவனுக்கும் கொடுத்து , நாமும் எடுத்துக் கொண்டு கொண்டாடுகிறோம்.

ஸ்லோகங்களை பஜன் வடிவில் பாடுவதில் எம்.எஸ். அம்மாவை மிஞ்ச யாரும் இல்லை அவர்கள் அந்த சமஸ்கிரத வார்த்தைகளை உச்சரிப்பதில் உள்ள தெளிவும், அதன் அர்த்தம் உணர்ந்து அனுபவித்து பாடுவதிலும் அவருக்கு நிகர் வெகு சிலரே. அதில் அவர் உணர்த்தும் பக்தியும் நம்மையும் சேர்த்து அந்த திசையில் செலுத்தும்.

இந்த மதுராஷ்டகத்தை அவரின் குரலிலேயே கேட்டு, கண்ணன்  பிறந்த நன்னாளைக் கொண்டாடுவோம் பிரெண்ட்ஸ்.

 

|| மதுராஷ்டகம்‌ ||

அதரம் மதுரம் வதனம் மதுரம்

னயனம் மதுரம் ஹஸிதம் மதுரம்‌ |

ஹ்றுதயம் மதுரம் கமனம் மதுரம்

மதுராதிபதேரகிலம் மதுரம்‌ || ||

வசனம் மதுரம் சரிதம் மதுரம்

வஸனம் மதுரம் வலிதம் மதுரம்‌ |

சலிதம் மதுரம் ப்ரமிதம்  மதுரம்

மதுராதிபதேரகிலம் மதுரம்‌ || ||

 

வேணுர்மதுரோ ரேணுர்மதுரஃ

பாணி-ர்மதுரஃ பாதௌ மதுரௌ |

ன்றுத்யம் மதுரம் ஸக்யம் மதுரம்

மதுராதிபதேரகிலம் மதுரம்‌ || ||

கீதம் மதுரம் பீதம் மதுரம்

புக்தம் மதுரம் ஸுப்தம் மதுரம்‌ |

ரூபம் மதுரம் திலகம் மதுரம்

மதுராதிபதேரகிலம் மதுரம்‌ || ||

கரணம் மதுரம் தரணம் மதுரம்

ஹரணம் மதுரம் ஸ்மரணம் மதுரம் |

வமிதம் மதுரம் ஶமிதம் மதுரம்

மதுராதிபதேரகிலம் மதுரம்‌ || ||

கும்ஜா மதுரா மாலா மதுரா

யமுனா மதுரா வீசீ மதுரா |

ஸலிலம் மதுரம் கமலம் மதுரம்

மதுராதிபதேரகிலம் மதுரம்‌ || ||

கோபீ மதுரா லீலா மதுரா

யுக்தம் மதுரம் முக்தம் மதுரம்‌ |

த்றுஷ்டம் மதுரம் ஶிஷ்டம் மதுரம்

மதுராதிபதேரகிலம் மதுரம்‌ || ||

கோபா மதுரா காவோ மதுரா

யஷ்டி ர்மதுரா ஸ்றுஷ்டிர்மதுரா |

தலிதம் மதுரம் பலிதம் மதுரம்

மதுராதிபதேரகிலம் மதுரம்‌ || ||

|| இதீ ஶ்ரீ மத்வல்லபாசார்ய விரசித மதுராஷ்டகம் ஸம்பூர்ணம்‌ ||

மீண்டும் சந்திப்போம்.

Geetham... Sangeetham - 17

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.