(Reading time: 4 - 7 minutes)
Krishna Jayanthi

நவராத்திரி சிறப்பு கீதம் சங்கீதம்....- 20 - தேவி

ணக்கம் பிரெண்ட்ஸ்

இதோ நவராத்திரி ஸ்பெஷல் கீதம் சங்கீதத்தில் மீண்டும் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.

இந்த முறை நீ இரங்காயெனில் புகல் ஏது.. பாடல். தமிழில் கீர்த்தனைகள் படைப்பதில் ஊத்துக்காடு வெங்கடசுப்பையர், பாபநாசம் சிவன் , இவர்களோடு இன்னும் சிலர் வல்லவர்கள். அதில் இந்தப் பாடல் பாபநாசம் சிவன் அவர்கள் இயற்றியது.

நவராத்திரி என்பது துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதி மூன்று தேவியர்களின் சிறப்பைக் குறிப்பது. அதில் நான்காம் நாளில் இருந்து ஆறாம் நாள் வரை மகாலக்ஷ்மியை வழிபடும் நாட்கள். இந்தப் பாடல் நான்காம் நாள் பாடப்படும்.

அந்த மூன்று தேவிகளின் சக்தியும் இணைந்து மகிஷாசுரன் என்னும் அசுரனை வதம் செய்தது நவராத்திரியின் பத்தாம் நாளான விஜயதசமி அன்றுதான்.

கல்விக்கு அதிபதியான சரஸ்வதி, செல்வத்திற்கு அதிபதியான லக்ஷ்மி,, வீரத்திற்கு அதிபதியான துர்கா மூன்று சக்திகளும் ஒன்று கூடும் நாள் விஜயதசமி. விஜய என்ற வார்த்தைக்கு அர்த்தம் வெற்றி என்பதாகும்.

விஜயதசமி அன்று ஆரம்பிக்கும் எந்த ஒரு காரியமும் வெற்றி அடையும் என்பதால் தான், கல்வி, கலை என அனைத்துமே அன்றைக்கு ஆரம்பிக்கப்படுகிறது. கலைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பொருட்டு குரு வணக்கமும் செலுத்தப்படுகிறது.

முதன் முதலில் குழந்தைகளை கல்விச் சாலையில் சேர்க்க விரும்புபவர்கள் விஜயதசமி அன்றே சேர்க்கின்றனர். பெரிய பள்ளிகளில் சேர்க்கை நேரம் இல்லாவிட்டாலும், ப்ரீ ஸ்கூலிங் விஜயதசமி அன்றே ஆரம்பிக்கின்றனர். அதே போல் கலைகள் கற்றுக் கொள்ள விரும்புபவர்களுக்கும் விஜயதசமி சிறப்பு.

அடாணா ராகத்தில் அமைந்த இப்பாடல் மகாலக்ஷ்மியின் கருணையை கேட்கும் பாடல். அடாணா ராகம் பற்றிய சில தகவல்கள்.

வீரச்சுவை நிரம்பிய இராகம். அடாணா : பிறப்பு, இறப்பு ஆகிய கட்டுக்களிலிருந்து நம்மை விடுவிக்கும் ஆற்றல் பெற்ற இராகம் என்று சிலர் எண்ணுகின்றனர்.

இந்த ராகத்தில் அமையப்பெற்ற புகழ் பெற்ற திரைப்பாடல்கள் என்றால் யார் தருவார் இந்த அரியாசனம் மற்றும் சலங்கை ஒலி திரைப்படத்தில் மஞ்சு பார்கவியின் நடனத்தை , கமல் அவர்கள் தன் அம்மாவிற்கு சமையலறையில் ஆடிக் காட்டும் “பால கனகமய” பாடல்.

நீ இரங்காயெனில் புகல் ஏது ? – அனைவருக்கும் தாயானவளின் இரக்கம் இல்லாவிட்டால் புகலிடம் ஏது என்று ஆரம்பிக்கும் வரிகள்.

அதிலும் தாய் இரங்காவிடில் சேய் உயிர் வாழுமோ .. எத்தனை உன்னதமான வரிகள். ஒரு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.