(Reading time: 9 - 18 minutes)

தொடர் - கீதம் சங்கீதம்....- 07 - மார்கழி மாதத்தின் சிறப்பு - தேவி

Geetham sangeetham

ஹாய் friends,

உங்கள் எல்லோரையும் கீதம் சங்கீதம் தொடரில் சந்தித்து நெடு நாட்களாகி விட்டது. கொஞ்சம் சோம்பேறித்தனம், கொஞ்சம் சொந்த வேலை இந்த காரணங்களளால் எழுத முடியாமல் போய் விட்டது. சொல்ல போனால் இது adhoc தொடர் என்பதால் ஒரு commitment ஓட எழுத விட்டுட்டேன்.. இனிமேல் முடிந்த வரை அதிக இடைவெளி இல்லாமல் கொடுக்க முயல்கிறேன்.

இந்த தடவை நான் எடுத்துக் கொண்டிருப்பது ஒரு குறிப்பிட பாடல் அல்ல. நான் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புவது மார்கழி மாதத்தின் சிறப்பு. இது பக்தியை மட்டும் குறிப்பது அல்ல. பக்தியோடு சேர்ந்து தமிழ், இசை என எல்லா சிறப்பும் சேர்ந்தது.. படிக்கும் உங்களுக்கே இவற்றை பற்றி தெரிந்து இருக்கும். இருந்தாலும் என்னுடைய எண்ணங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளவே இந்த எபிசொட் எடுத்துக் கொண்டேன்.

முதலில் மார்கழி மாதம் மட்டும் மற்ற பன்னிரண்டு மாதங்களில் சிறப்பாக பேசப்படுவதின் காரணம் பற்றி பார்க்கலாம்.

மாதங்களில் நான் மார்கழி “ இது பகவான் கண்ணன் பகவத் கீதையில் கொடுத்த வார்த்தை.

“மாதங்களில் அவள் மார்கழி” – இது கவியரசு கண்ணதாசன் தன் கவிதையில் கொடுத்து இருக்கும் வரிகள்.

பக்தியின் அடிப்படையில் பார்த்தால் மார்கழி மாதம் தேவர்களின் மாதமாக கருதபடுகிறது. மார்கழி மாதத்தின் பிரம்ம முஹூர்த்ததில் தேவர்கள் பூமிக்கு வருவதாக ஒரு ஐதீகம். அந்த நேரத்தில் நாம் எழுந்து, நீராடி இறைவனை வணங்கினால் கடவுளின் அருளோடு, சகல தேவர்களின் ஆசியும் நமக்கு கிடைக்கும்.

இந்துக்கள் மட்டும் அல்லாது கிறிஸ்தவர்களும் இந்த டிசம்பர் மாதமான மார்கழி மாதத்தில் தான் அவர்களின் கடவுள் குழந்தை இயேசு அவதரித்த நாளாய் கொண்டாடுகிறார்கள். அவர்களின் புது வருடம் பிறப்பதும் இந்த மாதத்தில் தான். அதனால் அவர்களும் இந்த மாதம் முழுதுமே இறை வழிபாட்டிற்கென ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

அறிவியலின் அடிப்படையில் பார்த்தால் இந்த மாதத்தில் தான் ஒசான் லேயர் பூமிக்கு மிக அருகில் வருவதால் அதிகாலையில் சுத்தமான oxygen நமக்கு கிடைக்கிறது. இது நமது சுவாச பிரச்சினைகளை சீராக்கி அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கிறது.

மற்ற மாதங்களை விட நாம் மார்கழியில் செய்யும் சில விசேஷ செயல்கள் என்ன என்ன என்று பார்க்கலாம்.

மார்கழி மாதத்தில் காலையில் வாசலில் கோலம் போட்டு மாட்டு சாணத்தை பிடித்து நடுவில் பூசணி பூ வைப்பார்கள். அதோடு வாசலில் விளக்கும் ஏற்றி வைப்பார்கள்

ஆண்கள் கோவிலுக்கு செல்வதால் அதிகாலை எழுந்து அந்த சுத்தமான காற்றை சுவாசித்து உடல் வலிமை பெறுவார்கள். பாதுகாப்பு மற்றும் பெண்களின் வேலை காரணமாக அவர்கள் அந்த நேரத்தில் வெளியே செல்ல முடியாது. அவர்களுக்கும் அந்த சுத்தமான காற்று கிடைக்க வேண்டும் என்பதால்தான் கோலம் போடுவதை ஏற்படுத்திக் கொண்டார்கள் என்பது என் கருத்து. மேலும் விளக்கு ஏற்றுவது இருளில் நடமாடுவது ஆண்களோ, பெண்களோ சிரமம் எனபதால் வெளிச்சத்திற்கு என்று நினைக்கிறேன்.

சாணம், பூசணி பூ எல்லாம் மிகசிறந்த இயற்கை கிருமி நாசினி என்று சொல்லலாம்.

அதோடு பெண்களின் கலைத்திறமை, புள்ளி வைத்து கோலம் போடுவதில் உள்ள கணக்கு மற்றும் வண்ணங்களின் கலவை பற்றின திறமை எல்லாமே வெளிபடுத்தபட்டதாக எண்ணுகிறேன்.

தமிழும் இசையும்

“வேதங்கள் அனைத்துக்கும் வித்தாகும்” என்ற வாக்கிற்கு உகந்த பாசுரம் “திருப்பாவை”.

வைணவ ஆழ்வார்கள் பன்னிருவரில் ஒரே பெண் ஆழ்வார் ஆண்டாள். விஷ்ணுசித்தரின் மகளாக ஸ்ரீவில்லிபுத்துரில் பிறந்து தமிழிலும், இசையிலும் புகழ் பெற்றவர் கோதை என்னும் பெயர் கொண்ட ஆண்டாள். அவர் பெருமாளையே தன் கணவனாக வரித்து அவர் திருவடி அடைய விரும்பியவர். அந்த கண்ணனுக்கு சாற்றும் மாலையை தான் அணிந்து அழகு பார்த்த பின் கண்ணனுக்கு சூடினார். அதை அந்த கண்ணனே ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை தான் வேண்டும் என்று விரும்பி  ஏற்றுக் கொண்டார். அதனால் அவர் சூடிக் கொடுத்த சுடர்க்கொடி என்றும் பெயர் பெற்றார்.

ஆண்டாள் அருளிய திருப்பாவை தான் மார்கழி மாதத்தில் பெருமாளுக்கு அதிகாலை சுப்ரபாதத்திற்கு பதில் பாடுகிறார்கள். திருப்பாவை இசையோடு கலந்த தமிழ் இலக்கியம் என்று கூறலாம். திருப்பாவை முப்பது பாட்டுகளுக்கு ராகமும் இருக்கிறது.

மார்கழி திங்களில் அதிகாலையில் நீராடி, விரதமிருந்து அந்த கோபியரின் கண்ணனை துதிப்பது கன்னியர்களுக்கு விரும்பிய மணவாழ்க்கை கிட்டும் என்றும் கூறுகிறார் ஆண்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.