(Reading time: 9 - 18 minutes)

கிருஷ்ணகானம் நமது கவியரசு கண்ணதாசன் அவர்கள் இயற்றிய வரிகள். திரு,எம்.எஸ். விஸ்வனதான் அவர்கள் இசை அமைக்க நமது பின்னணி பாடகர்கள் டி.எம்.எஸ். , பீ.சுசீலா, எஸ்.ஜானகி, எஸ்.பி.பி. , எல்.ஆர்.ஈஸ்வரி . வீரமணி, எம்.எஸ்.வி அனைவரும் இனைந்து பாடியிருக்கிறார்கள்.

கண்ணதாசனின் கடைசி பக்தி பாடலான புல்லாங்குழல் கொடுத்த மூங்கிலகளே இந்த ஆல்பதில்தான் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

கோதையின் திருப்பாவை வாசகன் எம்பாவை கூப்பிடும் குரல் கேட்டு கண்ணன் வந்தான் – இது திரு வீரமணி அவர்கள் பாடியது. திருப்பாவை கேட்டால் கண்ணன் ஓடி வருவான்  என்கிறார் கண்ணதாசன்.

புல்லாங்குழல் கொடுத்த மூங்கிலகளே பாடலில் கண்ணனின் வரலாற்றையும், மகாபாரதத்தையும் இணைந்து கொடுத்து இருப்பார் கவியரசர்.

ஆயர்பாடி மாளிகையில் .. பாடலில் கண்ணனுக்கு எஸ்.பி.பி அவர்களின் இனிய தாலாட்டு நிச்சயம் நாமும் நம் வாழ்வில் ஒரு முறை கேட்டு இருப்போம் அல்லது பாடியிருப்போம்.

கோகுலத்தில் ஒருநாள் ராதை பாடலில் பி.சுசீலா அவர்களின் இனிய குரலில் அந்த ராதையின் மனநிலையை அழகாக பாடியிருப்பார்

கோகுலத்து பசுக்களெல்லாம் பாடலில் நம் ஜானகி அவர்கள் கோபியரில் ஒருத்தியாக மாறி பாடியிருப்பார்.

கோபியரே கோபியரே கொஞ்சும் இளம் வஞ்சியரே.. இந்த பாடலில் எல்.ஆர்.ஈஸ்வரி அவர்களின் குரல் கோலாட்டம் போட வைக்கும் .

இந்த ஒவ்வொரு பாடல் வரிகளுக்கும், குரலுக்கும் பாவத்துக்கும் தனித்தனியாக எழுதினால் கிருஷ்ணகானம் மட்டுமே ஏழு எபிசொட் எழுத வேண்டியிருக்கும்.

என்னை பொறுத்தவரை கிருஷ்ணகானம் என்பது மிகவும் நெருக்கமான ஒன்று.. தினம் கேட்கிறோனோ இல்லையோ கேட்கும் பொழுது மனம் ஒன்றுவது நிச்சயம். இதோ அந்த ஆல்பத்தின் லிங்க் கொடுத்து இருக்கிறேன். எல்லோரும் கேட்டு மகிழ்வோம்.

இன்னும் நிறைய விஷயங்கள் மார்கழி, திருப்பாவை, கிருஷ்ணகானம் பற்றி பேச இருந்தாலும் அதில் சிலதை உங்களோடு பகிருந்து கொண்ட மகிழ்ச்சியோடு விடை பெறுகிறேன்.

நாமும் கோதையின் கண்ணன் அருள் பெற்று மீண்டும் அடுத்த கீதத்தில் இணைவோம்,

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

மீண்டும் சந்திப்போம்.

Geetham... Sangeetham - 06

Geetham... Sangeetham - 08

{kunena_discuss:1092}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.