(Reading time: 2 - 3 minutes)

தொடர் - கீதம் சங்கீதம்....- 09 - ராமன் கதை கேளுங்கள் - தேவி

Geetham sangeetham

ஹாய் friends,

கீதம் சங்கீதம் தொடரில் சற்று பெரிய இடைவெளிக்கு பின் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி..

இந்த தொடரில் அனேகமாக கர்நாடக இசை பாடல்கள் உங்களோடு பகிர்ந்து கொண்டு இருக்கிறேன். ஆனால் இந்த முறை என்னை கவர்ந்த திரையிசை பாடல் ஒன்றை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

சிப்பிக்குள் முத்து திரைபடத்தில் வரும் இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.

ராமன் கதை கேளுங்கள் என்று ஆரம்பிக்கும் பாடல் ராமன் சீதை கல்யாணத்தை கண் முன்னாடி கொண்டு வந்த வரிகள் , SPB அவர்களின் துள்ளல் குரலில் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது.

ராமரை பற்றிய வேறு வேறு அபிப்ராயம் இருந்தாலும், கம்பனின் வரிகள்

“ அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் “

என்ற பதத்தை விளக்கும் விதமாக இந்த பாடல் வரிகள் அழகாக அமைந்து இருக்கும்.

நாட்டுபுற பாடலும், கர்நாடக இசை சங்கீதமும், பஜனை பாடல் என்ற பலவும் கலந்து இருந்தாலும் பாடலை கேட்கும்போது அந்த நிகழ்வை பார்ப்பது போல் இருந்தது.

அதிலும் கடைசியில் “ஸ்ரீராமனே .. அதோ பாரப்பா “ இந்த வரிகளை சொல்லும்போது வாவ் என்று சொல்ல தோன்றியதுண்டு. ஸ்ரீராம நவமியான இன்று என்னோடு நீங்களும் இந்த பாடல் கேட்டு மகிழுங்கள்.

மீண்டும் சந்திப்போம்.

Geetham... Sangeetham - 08

Geetham... Sangeetham - 10

{kunena_discuss:1092}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.