(Reading time: 1 - 2 minutes)

அழகு குறிப்புகள் # 15 - செருப்புகள் - சசிரேகா

footwear

கால்களுக்கு அணியும் செருப்புகள் அழகாக இருந்தால் மட்டும் போதாது. அவைகள் வசதியாகவும், மிருதுவாகவும், அழகில் கச்சிதமாகவும் இருக்க வேண்டும்.

பாதங்களைப் பாதுகாக்கவே நாம் செருப்புகளை அணிகிறோம். ஒரே ஜதை செருப்புகளை வருடம் முழுவதும் அணிந்துக் கொண்டிருக்க கூடாது.

பாதங்களின் அளவும், தன்மையும் பருவநிலைக்கு தகுந்த மாதிரி மாறியிருக்கும். கோடைக்காலத்தில் பாதங்கள் பெரிதாகின்றன. அப்போது கொஞ்சம் பெரிய அளவு உள்ள செருப்புகளை அணிய வேண்டும்.

குளிர் காலத்தில் பாதங்களின் அளவு சுருங்குகின்றன. அப்போது சரியான அளவுள்ள வழக்கமாக அணியும் செருப்புகளை அணிய வேண்டும்.

கோடைக்காலத்தில் அணியும் செருப்பில் நன்றாக காற்று உட்புக வேண்டும். குளிர்காலத்தில் அணியும் செருப்பில் காற்று அதிகமாக உட்புகக் கூடாது. இதற்கு தகுந்த மாதிரி செருப்புகளை தேர்ந்தெடுத்து அணிய வேண்டும்.

{kunena_discuss:747}

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.