அழகு குறிப்புகள் # 55 - காஜல் ஐலைனர் டிப்ஸ்
காஜலை தேர்வு செய்யும் போது நினைவில் கொள்ள வேண்டியவை:
கறுப்பு மட்டும் காஜலின் நிறம் இல்லை
காஜல் என்றாலே அழகிய கறுப்பு நிறம் என்று தான் நமக்கு தோன்றும். இப்போதெல்லாம் கறுப்பு மட்டுமல்லாமல் பல வேறு நிறங்களில் காஜல்கள் வருகின்றன. உங்களுக்கு பிடித்த, ஏற்ற நிறத்தில் காஜல் வாங்கி பயன்படுத்துங்கள்.
ஆர்கானிக் காஜல்
கெமிக்கல் காஜல் உங்கள் கண்களுக்கு தீங்கு ஏற்படுத்த அதிக வாய்ப்புகள் இருக்கிறது. அதனால் கெமிக்கல் காஜல் பயன்படுத்தாமல் ஆர்கானிக் காஜல் வாங்கிப் பயன்படுத்துங்கள்.
அதேப் போல அலர்ஜி ஏற்படுத்தாத காஜலை தேர்வு செய்யுங்கள்.
வாட்டர் ப்ரூஃப் காஜல்
காஜல் கண்களில் நீண்ட நேரம் அழகாக இருக்க, வாட்டர் ப்ரூஃப் காஜலாக தேர்வு செய்து வாங்குங்கள்.