(Reading time: 3 - 6 minutes)

அழகு குறிப்புகள் # 55 - வீட்டுக்குள்ளே இருக்கும் அதிசயம் - தக்காளி

ரும பராமரிப்பு என்று வரும்போது, தக்காளி பொலிவூட்டும் சருமதிற்கான இயற்கையான தீர்வாகும்.

சற்றே அமிலத்தன்மை கொண்ட தக்காளியில் பொட்டாசியம் மற்றும் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இது மங்கலான சருமத்தை மாற்றி, பளபளப்பை மீட்டுக் கொடுக்க உதவுகிறது.

தக்காளியில் லைகோபீனும் உள்ளது. இது ஒரு ஆன்டி–ஆக்சிடன்ட். இது தவிர, வயது மற்றும் வெயில் பாதிப்பு தொடர்பான சரும பிரச்சினைகளை சரி செய்யவும் தக்காளி உதவுகிறது.

   

எண்ணெய் வடியும் சருமத்தை சரி செய்ய;

தக்காளி சருமத்தின் எண்ணெயைக் குறைக்க சிறந்தது மட்டுமல்லாமல், அது சருமத்தை சுத்தமாகவும் இறுக்கமாகவும் வைத்திருக்கவும் உதவுகின்றது.

எப்படி?

சின்ன பீஸ் தக்காளியை எண்ணெய் இருக்கும் உங்கள் சருமம் முழுவதும் தேய்த்து, ஐந்து நிமிடங்கள் கழித்து கழுவி விடுங்கள்.

   

சருமத்தை சீர் செய்ய:

தக்காளி சருமத்தின் திறந்த துளைகள் (open pores) மற்றும் பிளாக்ஹெட்ஸைக் குறைக்க உதவுகிறது.

எப்படி?

ஒரு தக்காளியை பாதியாக வெட்டி சருமம் முழுவதும் தேயுங்கள். 15 நிமிடங்கள் விட்டுவிட்டு கழுவி விடுங்கள்.

    

சருமத்தை பொலிவாக்க:

தக்காளி சருமத்தை பளபளப்பாக்க உதவுகிறது.

எப்படி?

ஒரு தக்காளியை மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். அதனுடன் 2 ஸ்பூன் முல்தானி மட்டி மற்றும் 2 ஸ்பூன் அரைத்த புதினா விழுதை சேர்த்து கலக்குங்கள்.

முகத்தை தண்ணீரில் கழுவி விட்டு, இந்த பேஸ்ட்டை தேயுங்கள். பேஸ்ட் உலரும் வரை விட்டு விட்டு, முகத்தை கழுவுங்கள்.

உங்கள் சருமம் புத்துணர்ச்சியுடனும், இளமை கொஞ்சும் விதத்தில் இறுக்கமாகவும் இருக்கும்.

    

வெயிலின் பாதிப்பில் இருந்து மீள:

வெயிலினால் சருமத்தில் ஏற்படுத்தும் பாதிப்பை சரி செய்ய தக்காளி உதவுகிறது.

எப்படி?

ஒரு தக்காளியை பிசைந்து, அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து கலக்குங்கள். அதை முகத்தில் தேய்த்து மசாஜ் செய்யுங்கள். 15 நிமிடங்கள் விட்டு விட்டு, குளிர்ந்த நீரில் கழுவுங்கள்.

இது வெயிலின் பாதிப்பை குறைக்க உதவுவது மட்டுமல்லாமல் வெயிலினால் சருமத்தில் ஏற்படும் வறட்சியைக் குறைக்கவும் உதவுகிறது.

 

தக்காளி சாறை சிறிது மோருடன் கலந்து, சருமத்தில் தடவிக் கொள்ளுங்கள்.

இதுவும் வெயிலினால் ஏற்படும் சரும பாதிப்புகளை சரி செய்ய உதவும்.

   

ஆரோக்கியத்தை கொடுக்கும் தக்காளி

இரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கும், கொழுப்பைக் குறைப்பதற்கும், எலும்புகள் மற்றும் பற்களுக்கு மேம்பாட்டிற் கும், உயிரணு சேதம் மற்றும் திசு சேதத்தை குறைக்கவும் தக்காளி சிறந்தது.

எனவே தக்காளியை தினசரி சமையலில் பயன்படுத்துங்கள் அதேப்போல உங்கள் சரும பாதுகாப்பிற்கும் பயன்படுத்துங்கள்.

  

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.