(Reading time: 2 - 4 minutes)

அழகு குறிப்புகள் # 56 - கண்களை அழகாக்கி காட்டும் காஜல் பயன்படுத்துவது எப்படி?

ண்களில் ஒப்பனை செய்ய தொடங்குவதற்கு முன் கண்களை அதற்கு தயார் செய்துக் கொள்வது முக்கியம்.

 

முதலில் உங்கள் கண்களைச் சுற்றியுள்ள பகுதியை சுத்தப்படுத்துங்கள். அதிகப்படியான அழுக்கு அல்லது எண்ணெய் இருந்தால் அகற்றி விடுங்கள்.

  

கண் இமைகள் மற்றும் கண்களைச் சுற்றியுள்ள தோலை ஈரப்பதமாக்க மாய்ஸ்சரைசர் பயன்படுத்துங்கள்.

  

உங்கள் சருமம் மாய்ஸ்சரைசரை உள் இழுத்துக் கொள்ளும் வரை காத்திருங்கள்

  

காஜல் அதிக நேரம் இருக்கவும், படியாமல் இருக்கவும் ஐ-ப்ரைமரைப் பயன்படுத்துங்கள்

 

காஜல் பயன்படுத்தும் முறை:

காஜலினால் மென்மையான மெல்லிய கோடு ஒன்றை கண்களின் கீழே வரையுங்கள்.

 

ங்கள் காஜல் அதிக நேரம் இருக்க வேண்டும் என்றால் பல அடுக்கு கோடுகள் வரைவது அவசியம். எனவே முன்பு வரைந்த கோட்டின் மேலே இன்னும் சில முறை வரையுங்கள். கண்ணின் வெளிப்பக்க மூலையிலிருந்து உள் மூலை வரை கோடு வரையுங்கள்.

நம்மில் பலரும் உள் பக்கம் இருந்து தொடங்கி காஜலினால் கோடு வரைவோம். அது தவறு. எப்போது வெளிப்பக்கம் இருந்து தொடங்குங்கள்.

​​உங்கள் கண்களுக்கு ஏற்ற விதத்தில், தேவைக்கு ஏற்ப பலமுறை காஜளால் கோடுகள் இடுங்கள்.

  

ண்களுக்கு கீழே மட்டும் அல்லாமல் மேலேயும் காஜலை பயன்படுத்தலாம். கீழே செய்தது போலவே மேலேயும் காஜலினால் மெல்லிய கோடுகள் இடுங்கள்.

அப்படி மேல் இமைகளின் ஓரத்தில் காஜல் பயன்படுத்துவது கண்களை பெரிதாக, அழகாக காட்டும்.

  

ண்களுக்கு ஜோடியாக உங்கள் புருவங்களையும் அழகாக்க ஐப்ரோ பென்சில் பயன்படுத்துங்கள். உங்கள் புருவங்களின் மேலே பென்சிலால் கோடு வரைந்து அழகை வெளிப்படுத்துங்கள்.

 

காஜலைப் பயன்படுத்தியப் பிறகு உங்கள் தோற்றத்தில் உடனடி வித்தியாசத்தைக் காண்பீர்கள்.

  

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.