(Reading time: 5 - 9 minutes)

அழகு குறிப்புகள் # 58 - வீட்டுக்குள்ளே இருக்கும் அதிசயம் – கடலை மாவு

ஞ்சள் போலவே கடலை மாவும் நம் வீட்டிலேயே இருக்கும் மிக சிறந்த அழகு சாதனம்.

கடலை மாவு தரும் அழகு பயன்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

முகப்பரு பிரச்சனைக்கு தீர்வு

வெயிலினால் சருமத்தில் ஏற்படும் மாற்றங்களை குறைக்க

சருமத்தில் இருக்கும் அதிக எண்ணெயைக் குறைக்க

வறண்ட சருமத்தை சீராக்க:

எக்ஸ்போலியேட்டிங் செய்ய:

இயற்கையாக சருமத்தில் இருக்கும் முடியை நீக்க

என கடலை மாவின் அழகு குண நலன்கள் அதிகம்.

  

முகப்பரு பிரச்சனைக்கு தீர்வு

கடலை மாவு முகப்பருவுக்கு சிகிச்சையளிக்கும் நற் பண்புகளைக் கொண்டுள்ளது.

கடலை மாவில் உள்ள துத்தநாகம் பொதுவாக முகப்பரு வர காரணமாக இருக்கும் தொற்றுகளுக்கு எதிராக போராடக் கூடியது என்பது அறிவியல் பூர்வமாக கண்டறியப் பட்டிருக்கும் உண்மை.

  

முகப்பருவை கட்டுப்படுத்த சில கடலைமாவு வழிகள்:

ஒன்று:

கடலை மாவு மற்றும் மஞ்சள் சம அளவு கலந்துக் கொள்ளவும்.

ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் ஆகியவற்றை அதோடு கலந்து நன்கு கலக்கவும்.

உங்கள் முகத்தையும் கழுத்தையும் கழுவவும். அது ஈரமாக இருக்கும் போதே, இந்த கடலைமாவு பேஸ்ட்டை முகம் மற்றும் கழுத்தில் தேய்த்துக் கொள்ளவும்.

10 நிமிடங்கள் விட்டு விட்டு, வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

  

இரண்டு

2 டீஸ்பூன் கடலை மாவு, ½ டீஸ்பூன் மஞ்சள், 2 டீஸ்பூன் சந்தன தூள் மற்றும் 1 டீஸ்பூன் பால் சேர்த்து பேஸ்ட் தயாரிக்கவும்

 உங்கள் முகம் மற்றும் கழுத்தில் பேஸ்ட்டை சமமாக தடவவும்

20 நிமிடங்களுக்குப் பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.