அழகு குறிப்புகள் # 60 - சருமத்திற்கு புத்துணர்ச்சி கொடுக்கும் வெள்ளரிக்காய் ஃபேஸ் மாஸ்க்
நன்மைகள்:
வெள்ளரிக்காய், புதினா இரண்டும் சருமத்திற்கு குளிரூட்டும் தன்மையை கொண்டவை. எனவே வெயில் காரணமாக ஏற்படும் தோல் அழற்சியை அமைதிப் படுத்தும்.
இது வைட்டமின் சி நிறைந்திருக்கும், நீரேற்றம் இருக்கும் மாஸ்க் ஆகும். இது சருமம் டல்லாவதை எதிர்த்துப் போராட உதவுகிறது. மற்றும் சருமத்தை பிரகாசமாகவும், மிருதுவாகவும் மாற்று உதவுகிறது.
எலுமிச்சையின் குணப்படுத்துதல் மற்றும் அமிலத் தன்மை இது ஒரு முகப்பரு எதிர்ப்புப் ஃபேஸ்பேக்காகவும் செயல்பட வைக்கிறது. இது கோடைகால அலர்ஜிகளையும் தடுக்க உதவுகிறது.
செய்முறை:
ஒரு கண்ணாடி கிண்ணத்தில் பாதி வெள்ளரிக்காயை துருவி எடுத்துக் கொள்ளுங்கள்.
2 - 3 புதினா இலைகளை நசுக்கி, 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறுடன் சேர்க்கவும்.
பிறகு வெள்ளரிக்காயுடன் சேர்த்து நன்கு கலக்கவும்.
இதை முகத்திலும் கழுத்திலும் தடவவும்.
குறைந்தது 20 நிமிடங்களுக்கு அதை விட்டு விடுங்கள்.
அது காய்ந்ததும், குளிர்ந்த நீரில் முகத்தை சுத்தமாக கழுவி, துடைக்கவும்.