(Reading time: 2 - 4 minutes)

அழகு குறிப்புகள் # 62 - நரை முடியை தவிர்க்க ஈஸி வழிகள் – 01 – நெல்லிக்காய், வெந்தயம், எண்ணெய் மிக்ஸ்

முடி பிரச்சனைகளை சமாளிக்க பல வருடங்களாக நெல்லிக்காய் பயன்படுத்த பட்டு வருகிறது. வைட்டமின் சி நிறைந்து இருப்பதால், நெல்லிக்காய் முடி நரைக்கு நல்ல தீர்வாக இருக்கிறது.

நெல்லிக்காயுடன் வெந்தயத்தை கலந்து பயன்படுத்துவது நன்மைகளை அதிகரிக்கும். வெந்தயத்தில் அதிக ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஏராளமான அன்டி ஆக்சிடன்ட்கள் இருப்பதால் அவை முடி ஆரோக்கியத்திற்கு சிறந்தது.

இந்த இரண்டு பொருட்களும் நரை முடியைத் தடுப்பது மட்டுமல்லாமல் முடி வளர்ச்சியையும் ஊக்குவிக்கும்.

 

நெல்லிக்காய், வெந்தயம், எண்ணெய் மிக்ஸ்

வெந்தயத்தை தூள் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

 

உங்களுக்கு விருப்பமான எண்ணெய் 3 டேபிள்ஸ்பூன் எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன்  ஆறு, ஏழு துண்டுகள் நெல்லிக்காய் சேர்க்கவும்.

 

இந்த எண்ணெய் - நெல்லிக்காய் கலவையை ஸ்டவ்வில் வைத்து சில நிமிடங்கள் கொதிக்க விடவும்.

 

அதனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் தூள் செய்த வெந்தயம் சேர்க்கவும்.

 

இந்த கலவையை நன்றாக கலக்கி, ஆற வைக்கவும்.

 

இதை இரவில் முடியில் நன்றாக தடவி, மறுநாள் காலையில் மைல்ட் ஷாம்பூ பயன்படுத்தி கழுவ வேண்டும்.

 

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.