(Reading time: 2 - 3 minutes)

அழகு குறிப்புகள் # 65 - நரை முடியை தவிர்க்க ஈஸி வழிகள் – 04 – தேயிலை

ரை முடியைத் தடுக்கவும், முடியை கருமையாக்கவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் முறைகளில் இதுவும் ஒன்றாகும்.

பிளாக் டீயில் கேஃபின் உள்ளது.  கேஃபினில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது நரை முடி இழைகளுக்கு கருப்பு நிறத்தை சேர்க்க உதவுவது மட்டுமல்லாமல், மயிர்க்கால்களை வலுப்படுத்துகிறது, முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது மற்றும் கூந்தலை பளபளப்பாக மாற்றுகிறது.

உங்கள் தலைமுடியை சரி செய்ய நிறைய நன்மைகள் நிறைந்த எளிதான வழிகளில் இதுவும் ஒன்று.

 

தேயிலை

ரண்டு டேபிள் ஸ்பூன் தேநீரை இரண்டு கப் தண்ணீரில் கொதிக்க வைக்கவும். அதில் ஒரு டீஸ்பூன் உப்பு சேர்க்கவும். இந்த கலவையை நன்றாக ஆற விடவும்.

தலைக்கு குளித்தப் பிறகு, ஆறவைத்த தேயிலை கலவைக் கொண்டு தலைமுடியை அலசவும்.

இதற்கு பதிலாக, இந்த கலவையை ஸ்ப்ரே பாட்டிலில் நிரப்பி, தலைக்கு குளித்தப் பிறகு, முடியை நன்றாக பிரித்து ஈரமான கூந்தலில் ஸ்ப்ரே செய்யவும் செய்யலாம்.

 

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.