அழகு குறிப்புகள் # 67 - நரை முடியை தவிர்க்க ஈஸி வழிகள் – 06 – உருளைக்கிழங்கு தோல்
நரை முடியை கருமையாக்கும் சக்தி வாய்ந்த பொருட்களில் உருளைக்கிழங்கு ஒன்றாகும்.
உருளைக்கிழங்கின் தோல்களில் மாவுச் சத்து உள்ளது. இது கூந்தலின் வண்ண நிறமிகளை மீட்டெடுக்கவும் பாதுகாக்கவும் உதவுகிறது மற்றும் முடி நரைப்பதைத் தடுக்கிறது.
உருளைக்கிழங்கு தோல் மிக்ஸ்
ஐந்து - ஆறு உருளைக்கிழங்குகளின் தோலை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு, அத்துடன் இரண்டு கப் தண்ணீர் சேர்க்கவும்.
இதை ஸ்டவ்வில் வைத்து கொதிக்க விடவும்.
தண்ணீர் மாவுக் கரைசல் போல நிறம் மாறத் தொடங்கும் வரை கொதிக்க விடவும். பின் அதை அடுப்பிலிருந்து அகற்றி ஆற விடவும்.
நன்றாக ஆறியதும், அதை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
தலைக்கு குளித்து முடித்தப் பின், கடைசியாக, மேலே தயார் செய்த உருளைக்கிழங்கு தோல் தண்ணீரைப் தலை முடியை அலச பயன்படுத்துங்கள்.
அதற்கு பிறகு முடியை திரும்பவும் தண்ணீரில் கழுவ வேண்டாம்.
நல்ல முடிவுகள் தெரிய வாரத்திற்கு இரண்டு முறை இதை பயன்படுத்தி பாருங்கள்.