(Reading time: 2 - 3 minutes)

அழகு குறிப்புகள் # 70 - ஈசி & இயற்கையான செம்பருத்தி பூ மாய்ச்சரைஸர்

செம்பருத்தி பூக்கள் பல நன்மைகளைக் கொண்டது. இது உங்கள் சருமத்திற்கு  ஈரப்பதத்தைக் கொடுத்து, இளமை, மற்றும் மென்மையான தோற்றத்தை அளிக்க வல்லது.

செம்பருத்தி பூக்களில் இருக்கும் இயற்கையான அமிலங்கள் சருமத்தில் இருக்கும் பழைய செல்களை உடைப்பதன் மூலம் உங்கள் சருமத்தை சுத்திகரிக்கவும் உதவுகின்றன. அதே நேரத்தில் முகப்பருக்கள் வருவதை கட்டுப்படுத்தவும் உதவுகின்றன.

இந்த பூவில் இயற்கையாக இருக்கும் எண்ணெய் உங்கள் சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க உதவுகிறது.

 

செம்பருத்தி பூ மாய்ச்சரைஸர்

உலர்ந்த செம்பருத்தி பூ இதழ்கள் 30 மற்றும் 2 டேபிள்ஸ்பூன் பாதாம் எண்ணெய்யை ஒன்றாக சேர்த்து, நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
இதை மைக்ரோவேவ் செய்யக்கூடிய பாத்திரத்தில் வைத்து 2-3 நிமிடங்கள் சூடாக்கவும்.

இந்த எண்ணெய் கலவையை ஒரு சுத்தமான துணி பயன்படுத்தி வடிகட்டிக் கொள்ளவும்.

அதனுடன் சிறிது குங்குமப்பூ மற்றும் 1 டேபிள்ஸ்பூன் கற்றாழை ஜெல் சேர்த்து நன்கு கலக்கவும். ஒரு மென்மையான பேஸ்ட் கிடைக்கும்.

இதை உங்கள் சருமத்தில் மாய்ச்சரைஸர் ஆக பயன்படுத்திக் கொள்ளலாம்.

  

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.