(Reading time: 1 - 2 minutes)

அழகு குறிப்புகள் # 72 - பொடுகை போக்கும் வெங்காயம்

பொடுகு என்பது தலைமுடியின் ஆரோக்கியத்தை சீர்குலைக்கும். இது தலை முடியின் வேர்களை பலவீனப்படுத்தி, முடி உதிரவும், அடர்த்தி குறையவும் காரணமாகிறது.

அது மட்டும் அல்லாமல பொடுகு தொடர் நமைச்சலை கொடுத்து நம்மை சங்கடப் படுத்தவும் செய்கிறது.

இந்த பொடுகை ஆரம்பக் கட்டத்திலேயே அழிக்க ஒரு ஈஸி வழி இதோ.

 

பொடுகை போக்கும் வெங்காயம்

வெங்காயம் பூஞ்சை தொற்றுக்கு எதிராக போராடி முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

 

வெங்காய பேஸ்ட்

வெங்காயத்தை அரைத்து பேஸ்ட்டாக்கி எடுத்துக் கொள்ளவும்.

அதனுடன் சிறிது தயிர் சேர்த்து நன்றாக கலக்கவும்.

இந்த வெங்காய – தயிர் பேஸ்ட்தை உச்சந்தலையில் தடவி, 15 நிமிடங்கள் விட்டுவிட்டு அலசவும்.

ஆரம்ப நிலை பொடுகு அல்லது லேசான பொடுகு தொல்லைகளில் இருந்து விடுதலை பெற இது உதவுகிறது.

  

 

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.