(Reading time: 1 - 2 minutes)

அழகு குறிப்புகள் # 73 - முழங்கை மற்றும் முழங்கால்களை இயல்பு நிறத்திற்கு மாற்ற இயற்கையான வழி

பேக்கிங் சோடா மற்றும் தயிர்

பேக்கிங் சோடா பழைய, உயிரில்லாத சரும செல்களைக் குறைக்க உதவும்.

தயிர் சருமத்தை மென்மையாகவும் ஈரப்பதமாகவும் மாற்ற உதவுகிறது. மேலும் அது வெயிலினால் சருமத்தில் ஏற்படும் மாற்றங்களையும் அகற்ற உதவுகிறது.

 

பேக்கிங் சோடா - 1 டேபில்ஸ்பூன், தயிர் - 1 டேபில்ஸ்பூன் என இரண்டு பொருட்களையும் எடுத்து அவற்றை ஒன்றாக கலந்து பேஸ்ட் ஆக்கவும்.

இதை முழங்கால்களிலும் முழங்கையிலும் தடவி இரண்டு மூன்று நிமிடங்கள் மெதுவாக தேய்க்கவும்.

பத்து நிமிடங்கள் விட்டு விட்டு, பின் வெது வெதுப்பான தண்ணீரில் கழுவவும்.  

 

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.