(Reading time: 2 - 3 minutes)

அழகு குறிப்புகள் # 74 - நெயில் பாலிஷை உடனடியாக காய வைக்க சில வழிகள்

சில நேரங்களில் அவசரமாக கிளம்ப வேண்டி இருக்கும். அப்போது நெயில் பாலீஷ் உலராமல் இருப்பது, கவலையை அளிக்கும். அந்த தருணங்களில் வேகமாக உங்கள் பாலீஷை உலர வைக்க சில ஈஸி வழிகள் இங்கே:

ஐஸ் தண்ணீரில் நனைக்கவும்

ஒரு கிண்ணத்தில் ஐஸ் தண்ணீர் எடுத்து உங்கள் விரல்களை அதில் நனையுங்கள். ஐஸின் சில்லென்ற உணர்வு உங்கள் நெயில் பாலிஷை விரைவாக உலர்த்த உதவும்.

 

பேபி ஆயில், குக்கிங் ஸ்ப்ரே

உங்கள் நெயில் பாலிஷை விரைவாக காய வைக்க, பேபி ஆயில் அல்லது குக்கிங் ஸ்ப்ரேவையும் பயன்படுத்தலாம்.

நெயில் பாலிஷ் மீது பயன்படுத்தும் போது, ​​எண்ணெய் அதில் உறிஞ்சப்பட்டு, பாலீஷ் விரைவாக உலர உதவும்.

நெயில் பாலீஷ் நன்றாக காய்ந்த உடன், எண்ணெயின் பிசிபிசுப்பை அகற்ற உங்கள் விரல்களை குளிர்ந்த நீர் பயன்படுத்தி கழுவவும்.

 

ஹேர்ஸ்ப்ரே

ஹேர்ஸ்ப்ரேவும் உங்க நெயில் பாலிஷை விரைவாக உலர வைக்க உதவும்.

அவசர அவசரமாக தயாராகும் போது ஹேர்ஸ்ப்ரே உங்களுக்கு உதவும். உங்களின் புதிய நெயில் பாலிஷின் மீது 30 cm தொலைவில் ஹேர்ஸ்ப்ரே வைத்து பயன்படுத்துங்கள். மிகவும் பக்கதில் வைத்து ஸ்ப்ரே செய்தால் உங்கள் நெயில் பாலிஷ் கலைந்து விடும்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.