அழகு குறிப்புகள் # 75 - முடி கொட்டுவதை தடுக்க உதவும் நெல்லிக்காய்
முடி உதிர்தலைத் தடுக்க நெல்லிக்காய் சிறந்த தீர்வு.
முடி கொட்டுவதற்கு வைட்டமின் சி குறைபாடு ஒரு முக்கிய காரணம். எனவே நெல்லிக்காயை உண்பது தலை முடியின் வேர்களை வலுப்படுத்தி முடி உதிர்வை கட்டுப்படுத்த உதவும்.
அது மட்டுமல்லாமல் நெல்லிக்காய் வேகமாக தலை முடி வளர்வதை ஊக்குவிக்கவும், ஆரோக்கியமான உச்சந்தலையை பராமரிக்கவும், இள நரையைத் தடுக்கவும் உதவுகிறது.
நெல்லிக்காய் ஹேர் மாஸ்க்
எலுமிச்சை சாறு மற்றும் நெல்லிக்காய் தூள் கலந்து ஒரு பேஸ்ட் தயார் செய்யுங்கள்.
அந்த பேஸ்ட்டை உங்கள் உச்சந்தலையில் மற்றும் தலைமுடியில் தேய்த்து மசாஜ் செய்யுங்கள்.
ஒரு மணி நேரம் வைத்து, பின்னர் அதை தண்ணீரில் அலசி விடுங்கள்