(Reading time: 1 - 2 minutes)

அழகு குறிப்புகள் # 13 - எண்ணெய் வழியும் முகத்தை பளிச்சென்று மாற்றுவது எப்படி?

முகம் எண்ணெய் வழிந்துக் காணப் படுவது ஏன்?

நம் முகத்தில் இருக்கும் ஈரப்பதம், அதிக எண்ணெய் உற்பத்தியை தூண்டக் கூடியது. இதனால் தான் சிலரின் முகம் எண்ணெய் வழிந்து காணப்படும்.

 

அப்படி எண்ணெய் வழிவது போன்ற தோற்றத்தை தடுப்பது எப்படி?

ஆப்பிள் சிடர் வினீகரை, முகத்தில் பயன்படுத்தும் facial mask உடன் பயன்படுத்தினால் இதை குறைக்கலாம் என டாக்டர்கள் கூறுகிறார்கள்.

 

ஆப்பிள் சிடர் வினீகரின் தனித்துவம் என்ன?

இந்த ஆப்பிள் சிடர் வினீகர், முகத்தில் எண்ணெய் உற்பத்தியாவதை கட்டுப்படுத்துவதுடன், முகத்தில் உள்ள சிறு சிறுத் துளைகளை சுருக்கி எண்ணெய் சுரப்பதையும் குறைக்கும்.

மேலும் ஆப்பிள் சிடர் வினீகரில் இருக்கும் ஆல்ஃபா ஹைட்ராக்சி அமிலம் முகத்தை மென்மையாக்கவும் செய்யும்.

 

செய்முறை:

நீங்கள் வழக்கமாக முகத்தில் பயன்படுத்தும் facemask 1 டேபிள் ஸ்பூன் எடுத்துக் கொள்ளவும்.

அதனுடன் 1 ஸ்பூன் ஆப்பிள் சிடர் வினீகரை சேர்த்து முகத்தில் பூசவும்.

பதினைந்து நிமிடங்கள் விட்டு விட்டு தண்ணீரில் முகத்தை கழுவவும்.

ஒருவாரத்திற்கு இரண்டு முறை இதை செய்தால், உங்கள் முகத்தின் எண்ணெய் எல்லாம் காணாமல் போய் பளிச்சிடும்!!!

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.