லேட்டஸ்ட்ஃ பேஷன் ட்ரெண்ட் வித் அஜி - காலேஜ் மாணவிகளுக்கான ட்ரென்ட்
காலேஜ் மாணவிகள் இப்போது பெரிதும் விரும்புவது காட்டன் சுரிதார்கள்.
இது காலேஜ் பெண்கள் என்றில்லாமல் வேலைக்கும் போகும் பெண்களையும் கவர்ந்துள்ளது!
கண்ணியமான தோற்றத்துடன் கண் கவரும் விதத்தில் வரும் இந்த சுரிதார்களை யாருக்கு தான் பிடிக்காது!
சில நூறுகளில் தொடங்கி பல ஆயிரம் ரூபாய் வறை வித விதமாக் வரும் இந்த ரக சுரிதார்களை வாங்கி உங்களின் வார நாட்களுக்கு பயன்படுத்தலாம்.
மிக்ஸ் & மேட்ச்
காலேஜ் பெண்களிடம் இப்போது பிரபலமாக இருக்கும் இன்னுமொரு ட்ரெண்ட் ‘மிக்ஸ் & மேட்ச்’ உடைகள்.
குர்தா, சுரிதார் பேன்ட், துபட்டா என தனித் தனியே எடுத்துக் கொண்டு அதை நிறத்திற்கு ஏற்ப மாற்றி மாற்றி பயன்படுத்துவது பல விதமான கலர் காம்பினேஷன்களை தருவதுடன், ஒரே விதமாக போரடிக்கும் உடைகள் அணியாமல் இருக்கவும் உதவும்.
இது இப்போதைக்கு பலரும் பின்பற்றும் ஒரு ட்ரெண்ட்
பஜாமா
அதிலும் கல்லூரி மாணவிகளை பொறுத்த வரை கேதரிங் மற்றும் பேலசோ வகை பஜாமா (பேன்ட்) மிகவும் பாப்புலர்.
கேதரிங் டைப் பேன்ட் ஸ்லிம் ஆனவர்களுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்.
கொஞ்சம் உடல் பூசியது போல் இருப்பவர்கள் பேலசோ பயன்படுத்தலாம் அல்லது ஹரீம் வித சுரிதார்களை பயன்படுத்தலாம்.
{kunena_discuss:747}