(Reading time: 3 - 5 minutes)

வீட்டுக்குள்ளேயே இருக்கும் நாட்களில் ஆரோக்கியத்தை பேணுவது எப்படி?

வீட்டிலேயே இருக்க வேண்டிய நிலையில் இருக்கும் இந்த நாட்களில் சுவையான நொறுக்குத் தீனி, நேரத்திற்கு உண்ணாமல், உறங்காமல் இருப்பது என்பதெல்லாம் நமக்கு ஏற்படக் கூடிய கெட்டப் பழக்கங்கள்.

இப்படி நம் ஆரோக்கியத்தை கவனிக்க தவற விடாமல், என்ன செய்கிறோம், எப்போது செய்கிறோம் என்று கண்காணித்து, தேவைக்கேற்ப நம் பழக்கங்களில் வேண்டிய மாற்றங்களை செய்வது அவசியம்.

 

உங்களுக்கான schedule ஏற்படுத்திக் கொள்ளுங்கள்

பொதுவாக நீங்கள் செய்ய கூடிய வேலைகளை பட்டியலிட்டு, எதை எப்போது செய்வது என்று அட்டவணை போட்டு வைத்துக் கொள்ளுங்கள்,

இதனால் எல்லா வேலைகளையும் நேரத்திற்கு முடிக்க முடியும்.

டென்ஷன், ஸ்ட்ரெஸ் போன்றவை அண்டாமல் பார்த்துக்கொள்ளவும் இந்த schedule முறை உதவும்.

 

உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்குங்கள்

சாதாரணமாக நடப்பது என்றாலும் சரி, முறையான உடற்பயிற்சிகள் செய்வதென்றாலும் சரி, அதற்கென்று தனியாக நேரம் ஒதுக்குங்கள்.

உணவு உண்பதைப் போல உடலுக்கு பயிற்சி கொடுப்பதும் மிகவும் அவசியம்.

 

ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள்

நேரம் இருக்கிறது, வீட்டிலேயே கிடைக்கிறது என்று ருசியான நொறுக்குத் தீனிகளை அடித்து தாக்காமல், என்ன உண்ணுகிறீர்கள் என்பதை கவனியுங்கள்.

முடிந்த அளவில் வீட்டில் தயாரிக்கப் பட்ட ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே உண்ணுங்கள்.

 

வேலை நேரத்தில் சின்ன சின்ன பிரேக்குகள் எடுத்துக் கொள்ளுங்கள்.

ஒய்வு என்பது நம் அனைவருக்குமே தேவைப்படும் ஒன்று.

அலுவலக வேலை என்றாலும், வீட்டு வேலை என்றாலும், ஒன்று மாற்றி ஒன்று என்று செய்துக் கொண்டே போகாமல், நடு நடுவே சின்ன, சின்ன ஒய்வு நேரங்களை வரையறுத்துக் கொண்டு, பின் பற்றுங்கள்.

இது வேலைகளை நீங்கள் திறமையாக செய்து முடிக்க உதவும்.

 

வீட்டுக்குள்ளே நடப்பதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள்

வெளியில் செல்ல முடியவில்லை என்பதை ஒரு காரணமாக காட்டி எப்போதும் உட்கார்ந்தே இருக்காமல், நேரம் கிடைக்கும் போது வீட்டுக்குள்ளேயே மெதுவாகவாவது உலாவ தவறாதீர்கள்.

தனியாக உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி செய்தாலும் இப்படி நடப்பது உடலுக்கு நல்லது.

 

நன்றாக தூங்குங்கள்

நல்ல தூக்கம், நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி தொடங்கி, செரிமானம் வரை அனைத்தும் ஆற்றலுடன் செயல்பட உதவுகிறது. அடுத்த நாளுக்கு தேவைப்படும் எனர்ஜியை பெறவும் நல்ல தூக்கம் உதவும்.

தினமும் எட்டு மணி நேரங்கள் ஆழ்ந்து உறங்குவது, மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.