(Reading time: 2 - 3 minutes)

வீட்டில் இருந்து வேலை செய்யும் போது உடல் ஆரோக்கியத்தை பேண சில டிப்ஸ்

பகல் நேரத்தில் குறுகிய ப்ரேக்கள் எடுத்துக் கொள்ளுங்கள்

எப்போதும் உட்கார்ந்துக் கொண்டே இருக்காமல், உடலை சுறுசுறுப்பாக வைக்க சின்ன சின்ன பிரேக்குகள் எடுத்துக் கொள்ளுங்கள்.

குழந்தைகளுடன் விளையாடுவது, சின்ன வீட்டு வேலைகள் என எதையாவது செய்யுங்கள்.

 

நடைப் பயிற்சி

நீங்கள் வேலை செய்வது சிறிய அறை என்றால் கூட, அதனுள்ளே நடப்பது உங்களுக்கு ப்ரேக்கையும் கொடுக்கும், உடலையும் ஆரோக்கியமாக்கும்.

மீட்டிங், போன் உரையாடல்கள் போன்றவற்றை நடந்துக் கொண்டே செய்யுங்கள்.

  

எழுந்து நில்லுங்கள்!

நடக்க முடியவில்லை என்றால் கூட அவ்வப்போது எழுந்து நின்று சில நிமிடங்கள் உங்கள் வேலையை தொடருங்கள்.

இதுவும் உங்கள் உடலுக்கு நல்லது.

  

ரிலாக்ஸ்!

மெடிடேஷன், மூச்சுப் பயிற்சி போன்றவை உங்களின் மனதை அமைதியாக வைக்க உதவும். அதை முயற்சி செய்துப் பாருங்கள்.

  

ஆன்லைன் உடற்பயிற்சி வகுப்பில் சேருங்கள்

சீரியஸாக உடல் ஆரோக்கியம் பற்றி யோசிக்கிறீர்கள் என்றால், நிபுணர்களால் உருவாக்கப்பட்டிருக்கும் ஆன்லைன் உடற்பயிற்சி வகுப்பில் சேர்ந்து அதை தவறாமல் பின் பற்றுங்கள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.