(Reading time: 2 - 3 minutes)

40 களில் இருக்கும் பெண்களுக்கான ஆரோக்கியக் குறிப்புகள்

கால்சியம் மற்றும் வைட்டமின் டி

40’க்களில் உங்கள் எலும்புகள் மீது கூடுதல் அக்கறை செலுத்துவது முக்கியம். எனவே உணவில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி இருப்பதாகப் பார்த்துக் கொள்ளுங்கள். இதற்காக பால், ப்ரோக்கோலி, கீரை, வெங்காயம் போன்றவற்றை வழக்கமான உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

  

வலிமைப் பயிற்சி செய்யுங்கள்

வலிமை பயிற்சி எனும் strength training செய்வதை பழக்கமாக்கி கொள்ளுங்கள். இது உங்கள் உடலின் மெட்டபாலிசம் (metabolism) அதிகரிக்க உதவும்.

  

மன அழுத்தத்தைக் குறையுங்கள்

ஸ்ட்ரெஸ் எனும் மன அழுத்தம் மனநிலை மாற்றம் (mood changes), முதுகுவலி, தலை வலி மற்றும் இதய நோய்கள் வரக் கூட காரணமாகலாம்.

சுறுசுறுப்பாகவும், மகிழ்ச்சியாகவும், மன அழுத்தமில்லாமலும் இருங்கள்!

நடப்பதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். உங்களுக்கு பிடித்தவற்றை செய்ய நேரம் ஒதுக்குங்கள். குடும்பம், நண்பர்கள், சக ஊழியர்கள் என மற்றவர்களுடன் பேசுங்கள்.

எந்த காரணத்திற்காகவும் உங்கள் மன அமைதியை சீர்குலைக்க அனுமதிக்காதீர்கள்.

   

மருத்துவ சோதனைகள்

20 மற்றும் 30 களில், நம் வாழ்க்கையின் லட்சியம், குறிக்கோள், குடும்பம் என ஆரோக்கியத்தை பற்றி யோசிக்காமல் பிஸியாக இருந்திருக்கலாம்.

ஆனால் 40க்கள் தொடங்கிய உடனேயே மருத்துவ பரிசோதனைகளை வழக்கமாக செய்வதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள்

ரத்த அழுத்தம் மற்றும் ரத்த க்ளூகோஸ் அளவை ஒரு வருடத்தில் குறைந்தது இரண்டு முறையாவது பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.