(Reading time: 3 - 5 minutes)

வீட்டில் இருக்கும் நாட்களில் ஸ்மார்ட்டான உணவு பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்

கொரோனா வைரஸ் நம் எல்லோருடைய வாழ்க்கை முறையையும் மாற்றி இருக்கிறது.

வீட்டுக்குள் மாட்டிக்கொண்டு இருக்கும் நேரத்தில் உணவில் ஆறுதல் தேடுவது மனித இயல்பு. அப்படி தெளிவில்லாமல் நொறுக்குத் தீனி சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது இல்லை.

ஆரோக்கியமான உணவு பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது எப்படி என்று பார்ப்போம்:

  

வழக்கமான முறையை பின் பற்றுங்கள்

லுவலகத்தில் அல்லாமல் வீட்டில் இருந்து அதே வேலையை செய்தாலும் நம் வாழ்க்கை முறை மாறி தான் இருக்கும்.

ஆனால் அதற்காக நம் வழக்கமான உணவு முறை வேண்டும் என்று அர்த்தமல்ல. ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு என்றே தொடருங்கள்.

உங்கள் உணவில் புரதம், ஆரோக்கியமான கொழுப்புகள், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் காய்கறிகளின் சமநிலை இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

 

பசிக்கும் போது சாப்பிடுங்கள்!

பசியே இல்லாதப்போது சாப்பிடாதீர்கள்! அதற்காக கொலைப் பசி வந்தப் பிறகும் சாப்பிடாதீர்கள்.

பசியை உணரத் தொடங்கும் போதே சாப்பிடுவதை பழக்கமாக்கி கொள்ளுங்கள்.

உங்கள் உணவு நேரத்தில் பசி இல்லை என்றால், எதனால் என்று சிந்தியுங்கள்! நேரம் இருந்தால் உடற்பயிற்சி செய்யுங்கள். நடந்துக் கொண்டே வேலை செய்ய முடியுமா என்று யோசியுங்கள்!

 

பசிக்காதப் போது சாப்பிடுவது உடல் எடையை அதிகரிக்கும்.

அடுத்த முறை பசிக்காதப் போது நொறுக்குத் தீனியை உங்கள் மனம் தேடினால், இசை கேட்பது, நடப்பது, நண்பருடன் போனில் பேசுவது என்று உங்கள் மனதை திசை திருப்புங்கள்.

  

தேவைக்கு சாப்பிடுங்கள்

டிவி பார்க்கும் போது அல்லது வேலை செய்யும் போது ஸ்நாக்ஸ் சாப்பிடுவது உங்களை அதிகப்படியாக உண்ண வைக்கும். எனவே அதை தவிர்த்து விடுங்கள்.

 

ஸ்நாக்ஸ் சாப்பிட விருப்பம் இருந்தால் ஒரு சிறிய சாசரில் தேவைக்கு கொஞ்சமாக எடுத்து வைத்து சாப்பிடுங்கள்.   

  

புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் அதிகம் உள்ள தின்பண்டங்களைத் தேர்ந்தெடுங்கள்!

கார்போஹைட்ரேட் அடிப்படையிலான உணவுகள் சீக்கிரமே பசியைக் கொடுக்கும். எனவே புரதமும் ஆரோக்கிய கொழுப்பும் அடங்கிய சிற்றுண்டிகளை தேர்வு செய்யுங்கள்.

காய்கறிகள், கொண்டைக்கடலை சுண்டல், முளைக் கட்டிய பயிறு போன்ற ஆரோக்கியமான உணவுகளை சிற்றுண்டியாக உண்ணுங்கள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.