(Reading time: 3 - 6 minutes)

ஒரே நேரத்தில் டையட் செய்வதும் உடற்பயிற்சி செய்வதும் உங்கள் எலும்பு ஆரோக்கியத்தை பாதிக்கலாம் – புதிய ஆய்வில் தகவல்

ரு புதிய ஆய்வின்படி, உடற்பயிற்சி மற்றும் உணவு முறைகளை இணைப்பது நல்ல யோசனையாக இருக்காது என்று தெரிய வந்திருக்கிறது.

  

பொதுவாக, ஒரு பெண் ஒரு நாளைக்கு 2,000 கலோரிகளை உட்கொள்ள வேண்டும். அதில் 30 சதவிகிதம் குறைத்தால் ஒரு நாளைக்கு 1,400 கலோரிகள் உணவில் கிடைக்க வேண்டும்.

ஒரு வாரத்திற்கு அரை கிலோ குறைக்க விரும்பும் பெண்களுக்கு பரிந்துரைக்கப்படும் கலோரி அளவு இது.

  

எலும்பு மற்றும் கனிம ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு, கலோரிகளைக் கட்டுப்படுத்தும் போது எலும்பு மஜ்ஜை கொழுப்பு (bone marrow fat) மற்றும் ஒட்டுமொத்த எலும்பு ஆரோக்கியத்திற்கு என்ன ஆகும் என்பதை பற்றி சொல்கிறது.

எலிகளை பயன்படுத்தி செய்யப்பட்ட இந்த ஆய்வில், எலிகள் நான்கு குழுக்களாக பிரிக்கப் பட்டு இருந்தன.

வழக்கமான உணவு உண்ணும் ஒரு குழு,

கலோரி கட்டுப்படுத்தப்பட்ட உணவில் ஒரு குழு,

வழக்கமான உணவுடன் உடற்பயிற்சி செய்யும் ஒரு குழு,

கலோரி கட்டுப்படுத்தப்பட்ட உணவுடன் உடற்பயிற்சி செய்யும் குழு.

 

கலோரி கட்டுப்படுத்தப்பட்ட குழுவில் இருந்த எலிகள் வழக்கமான உணவு உண்ணும் எலிகள் சாப்பிட்டதை விட 30 சதவீதம் குறைவாக சாப்பிட்டன.

  

ஆய்வின் முடிவில், கலோரி கட்டுப்படுத்தப்பட்ட குழுவில் இருந்த எலிகளின் எடை குறைந்திருந்தது ஆனால் அவற்றின் எலும்பு மஜ்ஜை கொழுப்பு அதிகமாகி இருந்தது. அதேப்போல இந்த குழுவில் இருந்த எலிகளின் எலும்பின் ஆரோக்கியமும் குறைவாக இருந்தது.

 

இன்றுவரை, எலும்பில் உள்ள கொழுப்பு பற்றி 100 சதவிகிதம் கண்டறியப்படவில்லை. ஆனால், இது மனிதர்களின் எலும்புகளுக்கு தீங்கு விளைவிப்பதாக கருதப்படுகிறது, ஏனென்றால் கொழுப்பு எலும்பை பலவீனப்படுத்துகிறது.

குறைவான கொழுப்பு பொதுவாக சிறந்த எலும்பு ஆரோக்கியத்தின் அறிகுறியாகும்.

 

எனவே ​​ஊட்டச்சத்து நிறைந்த குறைந்த கலோரி உணவு கூட எலும்பு ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தலாம்.

அதுவும் குறிப்பாக உடற்பயிற்சியுடன் செய்யும் போது எலும்புகளின் ஆரோக்கியம் குறைய அதிக வாய்ப்பு இருக்கிறது என்று இந்த ஆய்வின் முடிவில் தெரிவிக்கப் பட்டு இருக்கிறது.

 

இது பெண்களுக்கு மிகவும் முக்கியமானது. ஏனென்றால் வயதாகும்போது நம் எலும்பு ஆரோக்கியம் குறையத் தொடங்குகிறது. நம் உணவு மற்றும் உடற்பயிற்சி பழக்கம் எலும்புகளின் பலத்தை குறைக்காமல் இருப்பதாக இருப்பது அவசியம்.

  

எனவே எடையை குறைக்க டையட் அல்லது உடற்பயிற்சி செய்கிறீர்கள் என்றால் உங்கள் எலும்பின் ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்ளுங்கள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.